பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 327

 

நிகழ்ந்த மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மறுக்கூல மேபுரி பெருமாளே

பதவுரை

மலைக்கு நாயக-மலைகளுக்குத் தலைவனாக விளங்குபவரே! சிவகாமி நாயகர்-உமாதேவியாருடைய கணவராகிய சிவபெருமானுடைய, திருக்குமாரனே- சிறந்த செல்வப் புதல்வரே! முகத்து ஆறு தேசிக-ஆறு திருமுகங்களையுடைய பரமகுரு நாதரே! வடிப்ப மழது-அழகின்மிக்க பெண்ணரசியும், ஒரு- ஒப்பற்றவரும், ஆகிய, குறபாவையாள்-வள்ளியம்மையார், மகிழ்தரு வேளே- உள்ளம் உவந்து விரும்புகின்றவரே! வசிட்டர்-வசிட்ட முனிவர், காசிபர்-காசிப முனிவர், தவத்து ஆன யோகியர்-தவத்திற் சிறந்த சிவயோகியர், அகத்யமாமுனி-பெருமைமிக்க அகத்திய முனிவர், இடைக்காடர்-இடைக்காடர், கீரனும்-நக்கீரதேவர் ஆகிய ஆன்றோர்கள், வகுந்த பாவினில்-வகுத்துக் கூறிய அருட்பாடல்களில், பொருள் கோலமாய் வரும் முருகோனே-பொருள் வடிவாகத் தோன்றும் முருகக் கடவுளே! நிலைக்கும் நால்மறை-என்றும் நிலைத்திருப்பவனாகிய வேதங்கள் நான்கிலும் வல்ல, மகதது ஆன பூசுரர்- பெருமைமிக்க அந்தணர்கள் வாழுகின்ற, திருக்கொணாமலை-திருகொணாம்லை என், தலத்து ஆர் (உ-சாரியை) கோபுர நிலைக்குள் வாயினில்-திருத்தலத்தில் அருமையான கோபுரவாயிலுக்குள், கிளிப்பாடு பூதியில்-கிளிப்பாடுபூதியென்னும் இடத்தில், வருவோனே-எழுந்தருளி வருபவரே! நிகழ்த்தும் ஏழ் பவ கடல்- உயிரைத் தொழிற்படுத்துகின்ற எழுவகைப் பிறவிகளாகிய கடல்கள், சூறை ஆகவெ-கொள்ளை போக, எடுத்த வேல்கொடு-திருக்கரத்து ஏந்திய வேலாயுதத்தைக் கொண்டு, பொடி தூளது ஆ எறி-மிகவும் பொடிபட்டு போகுமாறு எறிந்த, நினைத்த காரியம்-அடியேங்கள் எண்ணிய கருமங்கள், அநுகூலமே புரி-அநுகூலமே யாகுமாறு (ஏ-தேற்றம்) அருள்புரிகின்ற, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! விலைக்கு மேனியில்-விலைசெய்யும் உடம்பில், அணி கோலை-அழகிய மாலைகளும், மேகலை-மேகலை என்ற ஆபரணமும், தரித்த ஆடையும்-உடுத்த ஆடையும், மணிபூணும், ஆகவெ- இரத்தினங்கள் பதித்த ஆபரணங்களும் பூண்டு, மினுக்கும் மாதர்கள் இடகாம மூழ்கியெ-மினுக்கு கின்ற விலை மகளிரிடத்தில் ஆசைவைத்து காமியன் என- மிகுந்த விருப்பமுடையவன் என்று, பாருளோர் எதிர் நகைக்கவே-உலகில் உள்ளவர்கள் முன் நகைக்குமாறு, உடல் எடுத்தே-உம்பெடுத்து, வியாகுல வெறுப்பது ஆகியெ-துன்புற்று அதனால்