வசிட்டர்.....................................பொருட் கோலமாய் வரும்:- வசிட்டாதி முனிவர் பெருமக்களும், நக்கீரராதி நாவலரேறுகளும் சித்தர் யோகியர்களும், முருகவேளைப் பரவி வழிபட்டு அருணலமுற்றார்கள். சிவவாக்கியர்வழிபட்ட சிவமலையும், பிண்ணாககு சித்தர் வழிபட்ட சென்னிமலையும், பாம்பாட்டிச் சித்தர் வழிபட்ட மருதமலையும், போகர் வழிபட்ட பழநிமலையும், கொங்கண சித்தர் வழிபட்ட கொங்கணகிரியும், அகத்தியர் வழிபட்ட இலஞ்சிப்பதியும், வசிட்டர் வழிபட்ட வேப்பூரும் இன்றும் கண்கூடாகக் கண்டு மகிழ விளங்குகின்றன. திருக்கொணாமலை:- இது ஈழ நாட்டிலுள்ள அரிய திருத்தலம். கிளிப்பாடபூதி:- அத்தலத்தின்திருக்கோயிலிலுள்ள ஒரிடமென்பர். இனி, அருணகிரியார் கிளிவடிவமுற்று கந்தரநுபூதி பாடினார் என்னும் வரலாறுண்மையில், வருங்காலத்தைச் சுட்டி அங்ஙனம் பாடினார் என்றும் கூறுவர். ஏழ்பவகடல்:- எழுவகைப்பிறவிகளையும் ஏழு கடல்களாக அருணிகரி நாதர் உவமதிக்கும் அழகு சிந்திக்கத்தக்கது. “தரையி னாழ்த்திரை யேழே போலெழு பிறவி மாக்கட லூடே நானுறு சவலை தீர்த்துன தானே சூடி”- (திருதரார்க்கொரு) திருப்புகழ் கருத்துரை மலைமன்ன! சிவமைந்த! வள்ளிமகிண! அருட்பாக்களின் பொருட்கோல! திருக்கோணமலைத்தேவ! நினைத்தவை முடிக்கும் நெடுஞ்சுடர்வேல! மாதர் மயக்குற்ற அடியேனை ஆட்கொண்ட அண்ணல்! புகழுரைக்கும் அடியேனைத் திருவடிப் பேறு தந்து தாயருள் புரிந்து காப்பாற்றுவீர். குன்றுதோறாடல் அதிருங கழல்ப ணிந்து னடியேனுள் அபயம் புகு தென்று நிலைகாண |