பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 333

 

விரிவுரை

கழல் என்பது வீரர்கள் தாளில் அணிந்துகொள்ளும் ஓர் ஆபரணம். வீர வீரவீராதிவீர விறலோன் வெற்றிவேற்கடவுள் ஒருவரே யாதலின் அருவருடை திருவடியில் அரதன வீரக்கழல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அது ஆகுபெயராய் கழலையுடைய திருவடியை உணர்த்தியது.

எதிரங்கொருவரின்றி:-

சிவபெருமான் “சமான ரகிதர்” தனக்குவமை யில்லாத் தனிப்பெருந் தலைவன்.

இறைவன்:-

எல்லாப்பொருள்களிலும் தங்கி இருப்பவன்; எல்லாப் பொருள்களும் தன்னகத்தே தங்க இருப்பவன்.

கருத்துரை

பார்வதிபால! குன்றுதோறாடுங் குமர! தேவரீர் அடியேன் உள்ளத்தில் உறைந்து இடர் சங்கைகளைக் களைந்து அருள்புரிவீர்.

200

எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில  வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ  தொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு   முருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ   தழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள  மிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக  குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய  முறுகோவே