பருவரை துணிய ஒருகணை தெரிவ பலமலை யுடைய பெருமாளே பதவுரை முழுகிய புனலில்-முழுகிய நீரில், இனமணிதரள-கூட்டமான முத்து மணிகளையும், முறுகிடு பவளம்-பின்னிய பவளங்களையும், மிகவாரி-நிரம்ப வாரியெடுத்து, முறையொடு குறவர் மடமகள் சொரியும்-வாங்குங்கள் என்ற முறையீட்டோடு குறப் பெண்கள் சொரிகின்ற, முதுமலை அழக-பழமலையில் விளங்கும் அழகரே! குருநாத-குருநாதரே! பழகிய வினைகள்-என்னுடன் கூடவே பழகி வருகின்ற வினைகள், யாவும் பொடிபடும்படி, அருளில் படிவர்- உனது திருவருளில் தோய்பவருடைய, இதயம் உறுகோவே-உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, தலைவரே! பருவரை துணிய-பருத்த கிரவுஞ்சமலை பொடிபடும்படி, ஒருகணை தெரிவ-ஒப்பற்ற ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்து விட்டவரே! பலமலை உடைய பெருமாளே-பலமலைகட்கும் தலைவனாயுள்ள பெருமையிற் சிறந்தவரே! எழுதிகழ் புவனம்-ஏழு என விளங்கும் புவனங்களை, நொடி அளவு அதனில்-நொடிப்பொழுதில், இயல்பெற மயிலில்-அழகு விளங்க, மயில்மீது, வருவோனே-வலம் வந்தவரே! இமையவர்-தேவர்கள், பரவி அடிதொழ-துதி செய்து திருவடியைத் தொழ, அவுணர் மடிவுஉற விடுவது- அசுரர் முடிவை யடையுமாறு செலுத்திய, ஒரு வேலா-ஒப்பற்ற வேலாயுதரே! வழுதியர் தமிழின்-பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழில், ஒரு பொருள் அதனை-ஒப்பற்ற பொருளதிகாரத்தின் உரையை, வழிபட மொழியும்-சங்கப் புலவர்கள் வழிபட்டு நிற்க ஆராய்ந்து உரைத்த, முருக ஈசா-முருகக் கடவுளே! மலர் அடிபணியும்-உமது மலர்போன்ற திருவடியைப் பணிகின்ற, மடமகள் பசலை-இந்த மடமகளானவள் ஆசைநோயால் உற்ற நிற வேறு பாட்டுடன், மயல்கொடு தளர்வது-மோகமயக்கத்தால் தளர்ச்சியடைவது, அழகோதான்- நியாயமகுமோ? பொழிப்புரை நீரில் மூழ்கியெடுத்த கூட்டதன முத்துமணிகளையும், கொடிபோற் பின்னிய பவளங்களையும், நிரம்ப வாரியெடுத்து, “முத்து வாங்குங்கள்” பவளம் வாங்குங்கள்” என்று கூவியழைத்து குறச்சிறுமியர் சொரிகின்ற, பழமலையில் வாழ்கின்ற அழகரே! குருநாதரே! அடியேனடன் பழகிய வினைகள் முற்றிலும் பொடிபடுமாறு, திருவருளில் தோய்ந்த அடியவர்களின் இதயக் கோயிலில் வாழ்கின்ற தலைவரே! பருத்த கிரவுஞ்சகிரி அழியும்படி ஒப்பற்ற கணையை விடுத்த பல மலைகட்குந் தலைவராகிய |