உளக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருப்பான். பலமலையுடைய பெருமாளே:- “சேயோன் மேய மைவரையுலகும்” என்ற தொல்காப்பிய வாக்கின்படி குறிஞ்சி நிலக்கடவுள் குமரன், எல்லா மலைகளையும் தனக்கு உறைவிடமாகக் கொண்டவன். உயர்ந்தவனை உயர்ந்த இடத்தில் வைப்பார்கள். அதுபோல தெய்வநாயகனைப் பழம் பெருமக்கள் மலைமீது வைத்து வழிபட்டார்கள். கருத்துரை மலைதோறும் மேவிய முருகவேளே! இப் பெண்ணின் தனிமையைத் தீர்த்து ஆட்கொள்வீர். தறையின் மானுட ராசையி னால்மட லெழுது மாலருள் மாதர்கள் தோதக சரசர் மாமல ரோதியி னாலிரு கொங்கையாலுந் தளர்மி னேரிடை யாலுடை யால்நடை யழகி னால்மொழி யால்விழி யால்மருள் சவலை நாயடி யேன்மிக வாடிம யங்கலாமோ பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிகள் அணுகொணாவகை நீடும ராசிய பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம் பகரொ ணாதது சேரவொ ணாதது நினையொ ணாதது வானத யாபர பதிய தானச மாதிம னோலயம வந்துதாராய் சிறைவி டாதநி சாசரர் சேனைகள் மடிய நீலக லாபம தேறிய திறல்வி நோதச சேளத யாபர அம்புராசித் திரைகள் போலலை மோதிய சீதள குடக காவிரி நீளலை சூடிய திரிசி ராமலை மேலுறை வீரகு றிஞ்சிவாழும் மறவர் நாயக ஆதிவி நாயக ரிளைய நாயக காவிரி நாயக |