பக்கம் எண் :


338 திருப்புகழ் விரிவுரை

 

வடிவி னாயக ஆனைத னாயக  எங்கள்மானின்
மகிழு நாயக தேவரர்கள் நாயக
கவுரி நாயக னார்குரு நாயக
வடிவ தாமலை யாவையு மேவிய  தம்பிரானே

பதவுரை

சிறை விடாத-தேவர்களுடைய சிறையை விடாது நின்ற, நிசாசரர் சேனைகள்- அசுராக்ளுடைய படைகள், மடிய-மாண்டொழிய, நீலகலாபம் அது ஏறிய- நீலநிறமுடைய தோகை மயிலின் மீது ஆரோகணித்து, திறல்விநோத சமேள- பேராற்றலும் திருவிளையாடலும் பொருந்தியவரே! தயாபர-கருணையின் மிக்கவரே! அம்புராசி-கடலினது, திரைகள் போல் அலைமோதிய-அலைகளைப் போல பேரலைகள் வீசுகின்றதும், சீதள-குளிர்ச்சி பொருந்தியதுமாகிய, குடககாவிரி-குடகுமலையினின்றும் பெருகி வரும் காவேரி யாற்றின் நீள் அலை சூடிய ழு நீண்ட அலைகளைப் பொருந்திய, திரிசிராமலைமேல் உறை வீர- திரிசிராமலையில் வாழ்கின்ற, மறவர் நாயக-அழகின் மிக்க காவிரி நாயக-காவிரி நதிக்குத் தலைவரே! வடிவின் நாயக-அழகின்மிக்க தலைவரே! ஆனைதன் நாயக-தெய்வயானை யம்மையாருக்குத் தலைவரே! எங்கள் மானின் மகிழும் நாயக-எங்களுடைய மான்போன்ற வள்ளியம்மை யாரிடத்தில் உள்ளம் உவக்கின்ற தலைவரே! தேவர்கள் நாயக-தேவர்களுக்குத் தலைவரே! கவுரி நாயகனார் குருநாயக-உமையம்மையாருக்குத் தலைவராகிய சிவபெருமானுக்குக் குருமூாத்தியாகிய நாயகரே! வடிவது ஆம் மலை யாவையும் மேவிய-அழகிய மலைகள் எல்லாவற்றிலும் விரும்பி வாழும், தம்பிரானே-தனிப்பெருந்தலைவரே! தறையின் மானுடர்-மண்ணுலகில் வாழும் ஆடவர், ஆசையினால் மடல் எழுதும் - தம்மீது கொண்ட ஆசையால் மடலேறுவதற்கு வடிவத்தை எழுதுகின்ற, மால் அருள் மாதர்கள்-மயக்கத்தைத் தருகின்ற பெண்களாகிய, தோதக சரசர்-வஞ்சகமான காமச் செயலுடையாரது, மாமலர் ஓதியினால்-சிறந்த பூக்களைச் சூடிய கூந்தலினாலும், இரு கொங்கையாலும்-இரண்டு தனங்களாலும், தளர் மின்நேர் இடையால்-சோர்கின்ற மின்னலைப் போன்ற இடையினாலும், உடையால்-ஆடையின் பொலிவாலும், நடை அழகினால்- நடையின் அழகினாலும், மொழியால் - இனிய மொழியாலும், விழியால் - (உள்ளத்தைக் கவர்கின்ற) கண்களாலும்-மருள்-மயக்கத்தை யடைகின்ற, சவலை நாய் அடியேன்-பலவீனனாகிய நாயிற் கடையேனாகிய அடியேன், மிக வாடிமயங்களலாமோ-மிகவும்