பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 339

 

வருத்தமுற்று மயங்குதல் தகுதியோ? பறவை ஆன மெய் ஞானிகள்- பறவைபோல் ஓரிடத்திலும்-தங்காது பற்றற்றுத்திரியும் உண்மை ஞானிகளும், மோனிகள்-மௌனிகளும், அணுக-ஓணாவகை-சேர்வதற்கு முடியாத வண்ணம், நீடும் இராசியம்-மிக்க இரகசியமானதும், பவன பூரக ஏகிகம் ஆகிய விந்துநாதம்-பிராணவாயுவை ஒடுக்கிச் செய்யும் யோகத்தில் ஒன்றுபட்ட விந்துநாதங்களால், பகரவொணாதது-சொல்ல வொண்ணாததும், சேர ஒணாதது- சேர முடியாததும், நினையொணாதது-நினைக்க முடியாததும், ஆன-ஆகிய, தயாபர பதியது ஆன-அருளோடு கூடித் தலையைப் பெற்றுள்ள, சமாதி மனோலயம்-மனம் இலயப் படுவதாகிய சிவ சமாதியை, வந்து தாராய்-தேவரீர் வந்து அடியேனுக்குத் தந்தருள்வீர்.

பொழிப்புரை

தேவர்களுடைய சிறையை விடாது மறுத்த இராக்கதர்களுடைய சேனைகள் மாய்ந்தொழியுமாறு நீலநிறமுடைய தோகை மயிலின் மீது ஊர்ந்த ஆற்றலும் விநோதமு முடையவரே! கருணாகரரே! கடலைப்போல் அலைகளை வீசுகின்றதும் குளிர்ந்திருப்பதும் குடகமலையினின்றும் பெருகி வருவதுமாகிய காவிரி நதியின் நீண்ட அலைகளை மாலையாகச் சூடியுள்ள திரிசிராமலை என்னும் திருமலையின்மீது வாழ்கின்ற தலைவரே! மலைப்பக்கங்களில் வாழ்கின்ற வேடர்களுக்குத் தலைவரே! காவிரி நதிக்குத் தலைவரே! அழகின் மிக்க நாயகரே! தெய்வகுஞ்சாயிம்மைக்குத் தலைவரே! எங்களுடைய வள்ளியம்மையாரிடத்தில் மகிழ்கின்ற சிவமூர்த்திக்கு குருமூர்த்தியாக உபதேசித்த நாயகரே! அழகிய மலைகள் எல்லாவற்றிக்கும் நிவாசஞ் செய்கின்ற பெருமித முடையவரே! பூவுலகில் ஆடவர்கள் தம்மீதுள்ள ஆசையினால் மடற் குதிரையின்மீது ஏறும் பொருட்டு உருவத்தை எழுதுகின்ற மயக்கத்தத்தரும் பெண்களாகிய வஞ்சக லீலைகளைச் செய்வோருடைய சிறந்த இடையினாலும், ஆடையினாலும், நடையின் அழகினாலும், மொழியினாலும், கருத்தைக் கவர்கின்ற கண்களாலும், மயக்கத்தையுற்ற அறிவில் பலமற்ற நாயிற் கடையேன் வருந்தி மயங்கி வீணே அழிவது தக்கதோ? பறவையைப்போல் ஓரிடமும் பற்றின்றி திரியும் மெய்ஞ்ஞானிகளும் மௌன விரதியரும் சேரவொண்ணா வகையினுள்ள, மிக்க இரகசியமும், பிராணவாயுவை ஒடுக்கிச்