பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 341

 

“சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ”             - திருவாசகம்

“சவலை தீர்த்துன தாளே சூடி”             - (நிருதரார்க்கொரு) திருப்புகழ்

பறவையான மெய்ஞ்ஞானிகள்:-

ஓரிடமென்ற நில்லாது பறந்து திரியும் பறவை போலிருக்கின்ற பற்றற்ற உண்மை ஞானிகள் என்பது ஒரு பொருள்; இனி, முட்டைக் குள்ளிருந்து பறவைக் குஞ்சு முற்றியவுடன் அம்முட்டையை யுடைத்துக்கொண்டு வெளிப்பட்டபின் திரும்ப எவ்வாறு அம்முட்டையை விரும்பி அதனிடம் வருவதில்லையோ, அதுபோல், துறந்து நீங்கியபின், தான் வாழ்ந்த ஊர் வீடு மனைவி மக்கள் என்பனவற்றை மனதாலும் பற்றாமல் நிற்கும் மெய்யறிவினர் என்பது வேறு பொருள். பறவை எவ்வாறு இரு சிறகினால் வானில் பறக்கின்றதோ, அதுபோல், உறுதி அன்பு என்ற இரு சிறகினால் மேல் நிலையில் உலாவுபவர் என்பதும் மற்றொரு பொருள். அந்த உறுதி, அன்பு என்ற இரண்டு கிடைப்பது மிக அருமையிலும் அருமை. இறைவனருளாலேயே கிடைக்கத் தக்கதாம்.

உன்றிரு வடிக்கீ ழுறுதியு மன்பு முன்றிரு வாருளினாற் கிடைப்ப
தன்றிநூல் பலவு மாய்ந்தாலுரைசெ யளப்பறுந் திறமையான் மதியான்
மன்றவே கிடைப்பதன்று மற்றதனை மாதவஞ் செய்திலாக் கயமை
துன்றிய புலையோர் யாங்ஙனம் பெறுவர் சோதியே கருணைவாரிதியே.
                                                                                                                                                                                             - சிவதத்துவவிவேகம்.

மோனிகள்:-

ஆசாநிகளத்தைத் துகளாக்கிய பின் பேசா அனுபூதியில் நின்றவர். மோனமே ஞானவரம்பு. சும்மா இருக்கும் சுகசாந்த நிலை.

இராசியம்:-

இரகசியம்அநுபவத்தில் அறியும் தன்மையது. சமாதி மனோலயம்:-

மனமிலயப்பட்ட அசைவற்றிநிலை. இதனைப் பேசவும் நினைக்கவும் சேரவும் முடியாது. என்னின் எழுவது எங்ஙனே யமையும். நம் அருணையடிகள் அந்த அனுபவத்தில் திளைத்து நின்ற இன்பத்தைப் பல இடங்களில் குறிப்பிட்டு வியந்து நிற்கின்றார்.

“தன்னந் தனிநின்றது தானறிய
   இன்னம் மொருவர்க் கிசைவிப்பதுவோ”                   -அநுபூதி (49)

வேலே விளங்கு கையான் செய்யதாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலேகொள இங்ஙன் காண்பதல்லால் மனவாக்குசெய