லாலே யடைதற்கரிதாய யரு உருவாகியொன்று போலே யிருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே. - அலங்காரம் (28) . . . . . . . . . . . . . .”நவிலத்தகுமோ யானாகிய என்னைவிழுங்கி வெறுந் தானாய் நிலைநின்றது தற்பரமே” - அநுபூதி (29) “அவ்வா றறிவா றறிகின்றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே” - அநுபூதி (30) சமேள:- சமேளனம்-சேர்க்கை. வடிவினாயக ஆனைதனாயக:- அழகின் மிக்கவராகிய தெய்வயானை யம்மையாருக்குத் தலைவரே என்றும் பொருள் கூறலாம். எங்கள் மானின்:- வள்ளியம்மையார் இச்சாசக்தியாதலாலும், மண்ணுலகில் வந்துபிறந்தும் நம்முடன் கூடி நம்போல் மானுடவடிவந்தாங்கி நின்றமையாலும், “எங்கள் மான்” என்று சொந்தம் பாராட்டினார். “நம் செந்தில் மேய வள்ளிமணாளர்க்குத் தாதை கண்டாய்” என்ற அப்பர் மூர்த்திகள் அருமை வாக்கையும் உன்னுக. வடிவதாமலை யாவையு மேவிய:- முருகனே முழுமுதற் கடவுளாதலின், உயர்ந்தோர்க்கு உயர்ந்த ஆசனந்தருதல்போல், அப்பரமபதியை மலையின்மீது வைத்து வழிபட்டனர் நம் பழந்தமிழர். “மலைக்கு நாயக” “கிரிராஜ” என்ற அருள்வாக்குகளை உன்னியுள்ளம் உவக்க, எம் உள்ளத்தின் முன்னே வந்து தோன்றுகின்றன. அதனாலன்றோ நம் அடிகள் யாவர்க்கும் நாயகன் என்று அடுக்கிச் சொன்னார். கருத்துரை யாவர்க்கும் நாயகனே! அடியேன் மாதராசைப்பட்டு மயங்கா வண்ணம் மனோலய சிவசமாதியைத் தந்தருள்விர். வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பலபாவின் வண்புகழ் பாரி யென்றிசை வாது கூறி |