வந்தியர் போல வீணி லழியாதே செஞ்சர ணாதகீத கிண்கிணி நீப மாலை திண்டிறல் வேல்ம யூர முகமாறும் செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே பஞ்சவ நீடு கூனு மொன்றிடு தாப மோடு பஞ்சற வாது கூறு சமண்மூகர் பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது பண்டித ஞான நீறு தருவோனே குஞ்சரம் யாளிமேவு பைம்புன மீது லாவு குன்றவர் சாதி கூடி வெறியாடி கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்தொ றாடல் மேவு பெருமாளே பதவுரை பஞ்சவன்-பாண்டியனுடைய, நீடுகூனும், நீண்டு விளைந்திருந்த கூனும், ஒன்றிடு தாபமோடு-இடையில் வந்து பொருந்திய வெப்புநோயும், பஞ்சு அற- பஞ்சாகப் பறந்து அழியுமாறும், வாது கூறு-வாதம் புரிந்த, சமண் மூகர்- சமணர்களாகிய ஊமைகள், பண்பு அறுபீலியோடு - நன்மையற்ற மயிற்பீலியுடன், வெம் கழு ஏற-வெப்பமான கழுவில் ஏறு மாறும், ஓது பண்டித-ஞானசம்பந்தராக வந்து தமிழ் வேதத்தை ஓதி யருளிய மாபெரும் புலவரே! ஞான நீ தருவோனே ஞானமயமான திருநீற்றைத் தந்தவரே! குஞ்சம்- யானைகளும், யாளி-யாளிகளும், மேவு-விரும்பி வாழ்கின்ற, பை புனம் மீது உலாவும்-பசுமை தங்கிய தினைப்புனத்தின் கண் திரிகின்ற, குன்றவர் ஜாதி கூடி-வேடர் குலத்தினர் ஒருங்கு கூடி, வெறியாடி கும்பிட-ஆவேசம் வந்து ஆடியும் பாடியும் வழிபட, நாடி வாழ்வு தந்து-அவர்களது களங்கமற்ற பக்தியை எண்ணி அவர்கட்கு நல் வாழ்வு நல்கி, அவரோடு-அக்குன்றவருடன் குலாவி, வீறு-பெருமை தங்கிய, குன்றுதோறு ஆடல் மேவு-மலைகள் தோறும் நின்று திருவிளையாடல் புரிகின்ற, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! வஞ்சக லேபா மூடர்தம்- வஞ்சகமும் உலோப குணமும் மூடத்தனமுமுள்ள கீழ்மக்களிருக்கின்ற, மஞ்சரி கோவை தூது-செல்வம் நிறைந்த ஊர்களைத் தேடிச் சென்று, மஞ்சரி கோவை தூது-மஞ்சரி தூது கோலை முதலிய, பல பாவின் பலவகையான பிரபந்தகளினால், வண் புகழ் பாரி-அவ்வுலுத்தரைத் தெளிந்த புகழை யுடைய பாரியென்றும், காரி-காரியென்றும், என்று இசைவாது கூறி-புகழ்ந்து அதற்குறும் தடைகளை நீக்க வாதஞ்செய்து, |