பக்கம் எண் :


346 திருப்புகழ் விரிவுரை

 

தங்கிய அவன் உள்ளந் துடித்தது. ஓரறிவுடைய அந்தக் கொடியலைவதற்கு அவன் மனம் சகிக்கவில்லை. முன் பின் ஒன்றும் யோசியாமல் உடனே தேலை விட்டுக் கீழே இறங்கினான். அம்முல்லைக் கொடியருகில் தேலை நிறுத்தினான். கொடியை அதன் மேல் எடுத்துவிட்டான். பின்பு அக் கொடியை நோக்கி “பூங்கொடியே! இனிய காட்சியும், நறிய மணத்தையும் நீ உலகுக்கு நல்குகின்றனை, காற்றினால் அலைந்தனை; இனி உனக்குக் காற்றால் ஒருவிதத் துன்பமும் நேராது. இன்பமாய் எழுந்து வளர்ந்து இன்புறுவாயாக” என்று வாழ்த்திவிட்டு இரதத்தில் பூட்டிய குதிரைகளை அவிழ்த்து, ஒன்றின்மேல் ஏறிக்கொண்டு ஏனையவை தன் பின்வர வீடுபோய்ச் சேர்ந்தான். ஆ! ஆ! எத்தனைப் பெரிய கொடை? பாரியைத் தவிர இவ்வாறு செய்வார் யாருளர்? இது உலகிற்கு வியப்பாக இருக்கும். “இவன் சுத்த அசடு; ஒரு கொடிக்கு தேரை கொடுப்பது அறிவுடைமையா?” என்று உலோபியர் கூறலாம். சற்று சிந்தித்தால் விளங்கும். ஒரு கொடியினிடத்து இவ்வளவு கருணையைக் காட்டினால் அவன் உள்ளம் எத்துணைப் பெரிது; கருணையின் ஊற்று அவன் உள்ளத்தில் இடைவிடாது சுரந்து கொண்டிருந்தது. கொடிக்கே இவ்வளவு பெரிய கொடை கொடுத்தவன் மனிதரிடம் எப்படி நடந்திருப்பான். அதனாலல்லவா சமயகுருவராகிய ஸ்ரீ சுந்தரமூர்த்திகள் திருவாக்கில் பொன்னேபோல் விளங்கும் பெரும்பேறு பெற்றான்.

காரி:-

காரியும் பாரியைப் போல் கடை யெழுவள்ளல்களில் ஒருவன்.

பஞ்சவனீடுகூனு..................தருவோனே:-

ஒருகால் பாண்டிய நாடு சமண இருளால் மூடப்பெற்றது; அப்போது அங்கு அரசாண்டவன் கூன் பாண்டியன். அங்கு பாண்டிமா தேவியும் குலச்சிறையார் என்கிற அமைச்சர் பெருமானும் சிவபக்தியிற் சிறந்திருந்தார்கள். அவ்விருவர்களது அழைப்பிற் கிணங்கி திருமறைக் காட்டில் தங்கியிருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார் குழாங்கள் சூழ மதுரைக்கு எழுந்தருளினார். அப்பொழுது சமணர்கட்குப் பல துன்னிமித் தங்கள் உண்டாயின. மங்கையர்க் கரசியார் ஏர்குலச் சிறையார் எதிர்கொண்டு இறைஞ்சி ஏத்தித் திருக்கோயிலுக்குக் கொண்டு சென்றார். வெம்பந் நீக்குஞ் சம்பந்தர் மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறையாரையும் சிறப்பித்துப் பதிகம் பாடியருளினார். பிறகு