திருமடத்தில் தங்கி யிருந்தார். கொடுங்குணமுடைய சமணர்கள் அழுக்காற்று, பிள்ளையாயிருந்து திருமடத்திற் தீ வைத்தனர். சம்பந்தப் பிள்ளையார் அத்தீயைப் “பையவே சென்று பாண்டியற்காகவே” என்று வாய் மலர்ந்தருள, உடனே அத்தீ பாண்டியனைப் பற்ற வெப்பு நோயால் வெதும்பி கழிபெருந்துன்புற்றான். சமணர் மணி மந்திர ஒளஷதங்களால் நீக்க முயன்று பயன்பெறாது ஓய்ந்தனர். அவர்கள் முயற்சியால் கணவன் அனுமதி பெற்று சம்பந்தப் பெருமாளை எழுந்தருளிச் செய்தார். பிள்ளையார் அங்கு வர அவரது அருளுருவைச் சமணர்கள் கண்டு கதிரவனைக் கண்ட குமுதம் மலர்கள் போலாயினார், ஏனையோர். ஞானத்தின் றிருவுருவை நான்மறையின் றனித்துணையை வானத்தின் மிசையன்று மண்ணில்வரு மதிக்கொழுந்தை தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தி னெழுபிறப்பைக் கண்குளிரக் கண்டார்கள். பெருமான் “மந்திரமாவது நீறு” என்ற திருப்பதிகத்தை யுலகம் உய்யப் பாடி, திருநீறு பூசி, பாண்டியன் வெப்பு நோயைத் தீர்த்தருளினார். பிறது சமணருடன் கனல்வாது, புனல்வாது, புரிந்து, “வாழ்க அந்தணர்........ வேந்தனும் ஓங்குக‘ என்று பாடியருளி, பாடிணயன் கூனையும் நீக்கியருளினார். பாண்டியன் நின்ற சீர் நெடுமாற நாயனராக விளங்கினான். சமணர்கள் கழுவேறினார்கள். விரிவை திருப்புகழ் விரிவுரை 5ஆம் தொகுதி 129ம் பக்கத்தில் பார்க்கலாம். கருத்துரை ஞானசம்பந்தராக வந்து சைவசமயத்தை வளர்த்தவரே! மலைகள் தோறும் நின்ற முருகனே! உலோபிகளைப் பாடி வீணேயழியாமல் தேவரீரைப் பாடி உய்யுமாறு அருள்புரிவீர். வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேரமேவிய வண்கணா ரார வாரமு மருள்வோராய் வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்திய ஆசை யேதரு விலைமாதர் பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு பஞ்சியே பேசி நாடொறு மெலியாதே |