பக்கம் எண் :


348 திருப்புகழ் விரிவுரை

 

பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகுலாவிய
பண்புசேர் பாத தாமரை   யருள்வாயே
அஞ்சவே சூரனானவ னுய்ஞ்சுபோ காமலே யயில்
அன்றுதா னேவி வானவர்   சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபா   முதல்வோனே
கொஞ்சவே காலிகன் மேவுச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ்   புதல்வோனே
கொந்துசேர்சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய   பெருமாளே

பதவுரை

அஞ்சவே சூரன்ஆனவன்-சூரன் அஞ்சும்படியும், உய்ஞ்சு போகாமல் பிழைத்திராதபடியும், அயில் அன்று தான் ஏவி-வேலாயுதத்தை அந்நாள் செலுத்தி, வானவர் சிறைமீள-தேவர்கள் சிறையினின்றும் மீளுமாறு, அன்பினோடே மனோரதம் மிஞ்ச-அன்புடன் அவர்களின் விருப்பம் நிறைவேற, மேலான வாழ்வு அருள்-மேலான நல்வாழ்வை அவர்கட்கு வழங்கிய, அண்டர்கோவே-தேவர் தலைவரே! பராபர-பெரும் பெரும் பொருளே! முதல்வோனே-முதன்மையானவரே! கொஞ்சவே-இனீய ஒலி கொஞ்சும்படி, காலின்மேவு சதங்கைதான் ஆட-திருவடியில் விளங்கும் சதங்கைகள் ஒலிக்க, ஆடிய-திருநடனம் புரிந்து, கொன்றையான்-கொன்றைமலர் சூடிய சிவபெருமான், நாளுமே மகிழ் புதல்வோனே-நாள்தோறும் மகிழ்கின்ற திருமைந்தரே! கொந்து சேர் சோலை மேவிய-பூங் கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய, குன்று சூழ்வாகவே வரு-குன்றுகளின் சூழல் உள்ள, குன்றுதோறு ஆடல் மேவிய-மலைகள்தோறும் திருவிளையாடல் புரிந்து வீற்றிருக்கும், பெருமாளே-பெருமையின் மிகுந்தவரே! வஞ்சமே கோடி கோடிகள்-கோடிக்கணக்கான வஞ்சனைகள்; நெஞ்சமே சேரமேவிய- உள்ளத்தில் பொருந்தவைத்துள்ள, வன்கணார்-கொடியவர்கள், ஆரவாரமும் அருள்வோராய்-ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல, வம்பிலே வாது கூறிகள்-வீண்வாது பேசுபவர்கள், கொஞ்சியே-கொஞ்சிபேசி, காமலீலைகள் வந்தியா-காமலீலைகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையேதரு, விலைமாதர்- ஆசையை வளர்க்கின்ற விலைமாதர்களுடைய, பஞ்சமா பாவமே தரு- ஐம்பெரும் பாதங்களையுந் தருகின்ற, கொங்கைமேல் நேசமாய்.தனங்களின்மீது விருப்பம் வைத்து, வெகு பஞ்சியே-பேசி மிகுந்த வருத்தங்காட்டிப் பேசி, நாள்தோறும் மெலியாதே-தினந்தோறும் அடியேன் மெலிந்து போகாமல், பந்தியாய், வானுளோர் தொழ-வரிசையாக நின்று தேவர்கள் தொழுது வணங்க,