களான இவ்வுடம்பை விடாதுகொண்டு குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை யென்று நான்கு வகையாகப் பிரித்துள்ள உலகில் அவமே அலைந்து திரிகின்றேன்; நான் அல்ல என்று சீவபோதத்தை மலராக அன்பர்கள் அர்ச்சிக்க அம்மலரினையணிகின்ற தலைவரே! உமது திருவருள் நிலையை ஊன்றிப் பார்த்து அந்நிலையில் உறைத்து நின்று தொழுகின்றேனில்லை. அருட்சோதியை யுணர்கின்ற சுகவாழ்வே சிவானந்தப் பேறு என்று தெளிந்து அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து அடியேனை யாட்கொண்டருள்வீர். விரிவுரை வாதினைடர்ந்த வேல்விழியர்:- “என்று நீ அன்று நான்” என்றார் தாயுமானார்; அதனால் ஆன்மாக்கள் அநாதிநித்தியமென்பது ஒருதலை; ஆனால் உயிர்கள் ஓவாது பிறப்பதும் இறப்பதுமாக யோனிவாய்தோறும் மாறிமாறி உழன்றுகொண்டே யிருக்கின்றன். அப்பிறப்புக்கு வித்து அவாவெனப்படும். அவாவென்ப எல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து. - குறள் அவ்வவா மூவகைப்படும்; மண்ணவா, பெண்ணவா, பொன்னவா, என்பன; இவற்றுள் பொன்னவாவும் மண்ணவாவும் மனிதப் பிறப்புக்கே யுரியன; ஏனைய பிறப்புகளுக்கு இல்லை; பெண்ணவா பிறவிகடோறுந் தொடர்ந்து வருவது. எனவே அதுவே கேடுகள் அனைத்தையுந் தருவது. “வாமமேகலை மங்கைய ரால்வரும் காமமில்லை யெனிற் கடுங் கேடெனும் நாமமில்லை நரகமுமில்லையே” - இராமாயணம் அவாவை விளைப்பது அவரது கண்களேயாதலின் “வாதினை யடர்ந்த வேல்விழி” என்றனர்; வேல் கூர்மையாக நின்று நெஞ்சைப் பிளக்கும்; அங்ஙனமே அவர்கள் விழியும் கூர்மையாக நின்று இளைஞர்களின் நெஞ்சைப் பிளக்கும். மாயமதொழிந்து தெளியேனே:- மாயம்-நிலையற்றது; இல்லாதவற்றை உள்ளதுபோல் காட்டுவது எனினும் பொருந்தும். இன்பம் போல்காட்டி துன்பத்தையே விளைவிக்கும்; இச்சிறு இன்பமும் நிலையில்லாதது. மாமலர்கள் கொண்டு.....................................பணியேனே:- மேற்கூரிய மாதர்மய லறுப்பதற்கு வழி மகமாயை களைந்திட |