1.நிராமயாத்மா என்ற குணம் அநாதிபோதத்திலும் விசுத்த தேஹம் என்ற குணம் அலுப்தசக்தியிலும் அடங்கி எண்குணம் ஆறாகுமாறு காண்க. 2. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களே ஆண்டவனுக்கு ஆறுமுகங்கள் என்ப. 3. திக்தி, பராசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, குடிலாசக்தி என்ற ஆறு சக்திகளே ஆறுமுகங்கள் என்ப. 4. அகர உகர மகர நாத விந்து கலை என்ற ஆறுமே ஆறுமுக மென்ப. 5. மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை, தத்துவம், என்ற அத்துவாக்கள் ஆறுமே ஆறுமுகங்கள் என்ப. 6. ஐஸ்வரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம், என்ற மற்றொருவகையான குணங்கள் ஆறுமே ஆறுமுக மென்ப. 7. சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என்ற ஆறு சமயங்கட்குந் தானே தலைவன் என்று இறைவன் ஆறுதலையோடு விளங்குகின்றவன். 8. ஆறுமுகங்களி லிருந்து வெளிப்படும் பிரகாசங்களாவன; ஞானப்ரகாசம், ஞானானந்தப்ரகாசம், சர்வஞான வியாபகப்ரகாசம், சுத்தஞான சாட்சிப்ரகாசம், சர்வபரிசுத்த பிரம ஞானானந்த அருட்ப்ரகாசம், அநாதிநித்ய ப்ரமஞானானந்வ சிவப்ரகாசம். 9. சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம், கல்பம் என்ற அங்கங்கள் ஆறுமே ஆறுமுக மென்ப. 10. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கீழ், மேல், என்ற ஆறு திசைகளுமே ஆறுமுகப் மென்ப. இங்ஙனம் ஆறுமுகங்கட்கு எண்ணில்லாத விளக்கங்கள் உள. அவற்றையெல்லாங் அவனரு ளறிவுகொண்டு ஆய்ந்துணர்க. ஆட்ஞ்மாறினக்கும் ஆதா ரங் ளாறினுக்கும் அத்த வாவோ றாறினுக்கும் அமையுந் தானே முதலென்று தீட்டும் படியா வருந்தெளியத் தெளித்தாங் காறு முகந்திகழச் செல்வ மலியு மிடைக்கழிவாழ் சேயைப் பரிந்து காக்கவே. -மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடுமுயில்:- “தாமரைக்கணான் முதலிய பண்ணவர் தமக்கும் ஏமுறப்படு மறைக்கெலா மாதிபெற் றியலும் ஓம்” |