பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 359

 

சோலைமலை நின்ற பெருமாளே:-

இது பழமுதிர்சோலை; ஆறாவது படைவீடு; ஆஞ்சை என்னும் ஆறாவது ஆதாரம். புருவநடுவே நிலாப்பிறை போன்ற வடிவத்துடன் ‘ய‘ கரத்தை இடமாகக் கொண்டது பழமுதிர்சோலை. மதுரைக்கு வடகிழக்கே 12 மைல் தொலைவில் விளங்குவது; இப்போது அழகர்கோயில் என வழங்குகின்றது. முருகு என்றால் அழகு என்பதுதானே பொருள்; அழகர் எனினும் அழகர்கோயில் திருமால் கோயிலாக விளங்குகின்றது. பண்டைக் காலத்தில்பலபத்திரன் கோயிலும், திருமால் கோயிலும், முருகவேள் கோயிலும் இருந்தன; பிறகு காலவேற்றுமையால் மறைந்தும் மாறியும் போய்விட்டன.

“பழமுதிர்சோலை மலைகிழவோனே”  -நக்கீரர்

ஆக்ஞாஸ்தானமாகிய ஆறாவது படைவீட்டில் “சோஹம் அது தந்து ஆள்வாய்” என்று முடிந்த முடிபாகிய வேண்டுகோளை சுவாமிகள் விண்ணப்பஞ்செய்வது ஊன்றிக் கவனிக்கத் தக்கது.

கருத்துரை

பழமுதிர்சோலையில் எழுந்தருளிய பரமனே! மாதர்மயலற மலரிட்டு வணங்கி, ஆறுமுகத்தின் பொருளையும் மயிலின் தன்மையையும் உணர்ந்து சீவபோதங் கழன்று ஐக்கிய முத்திபெற அருள்புரிவீர்.

2

வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி
மாயநம னுக்கு      முறவாகி
மாதவம ழித்து லீலைகள் மிகுந்து
மாவடுவை யொத்த     விழிமாதர்
சீருடனழைத்து வாய்கனிவு வைத்து
தேனித ழளித்து      அனுபோக
சேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து
சீர்மைகெட வைப்பணு       ருறவாமோ
வாரினை யறுத்துமேருவை மறித்து
மாகனக மொத்த      குடமாகி