பக்கம் எண் :


360 திருப்புகழ் விரிவுரை

 

வாரவணை வைத்து மாலளித முற்று
மாலைகளு மொய்த்த       தனமாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகையுமை பெற்ற    புதல்வோனே
சூர்கிளை மடித்து வேல்கர மெடுத்து
சோலைமலை யுற்ற      பெருமாளே

பதவுரை

வாரினை அறுத்து-கச்சுதனைக்கிழித்து, மேருவை மறித்து-மேரு மலையையும் தடுத்துக் கீழ்ப்படுத்தி, மா கனகம் ஒத்த குடம் ஆகி-சிறந்த பொன் போன்ற குடம்போல் விளங்கி, வார அணைவித்து-அன்பாகிய ஆதரவைவைத்து, மாலவிதம் உற்று-மிக்க அழகைக் கொண்டு, மாலைகளும் மொய்த்த-மாலைகள் நெருங்கிய, தனமாது-தனங்கள் விளங்கும் பெண்மணியும், தோர் அணிபுயத்தி-அணிவடப் பூண்ட புயங்களையுடையவரும், யோகினி- யோகினியும், சமர்த்தி-சாமார்த்தியம் உடையவளும், தோலை-மயில் போன்றவளுமாகிய, உமை பெற்ற புதல்வோனே-உமாதேவியார் பெற்ற குமாரரே! சூர்கிளை மடித்து-சூரனையும் அவன் சுற்றத்தாரையும் அழித்து, வேல்கரம் எடுத்து-வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி, சோலைமலை உற்ற- சோலைமலையில் வீற்றிருக்கின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! வார்குழையை எட்டி-நீண்ட காதணியை எட்டியும், வேளினை-மருட்டி- மன்மதனை மருட்சியுறச் செய்தும், மாய நமனுக்கும் உறவு ஆகி-மாயத்தில் வல்ல யமனுடன் உறவுபூண்டும், மாதவம் அழித்து - நல்லதவநிலையை அழித்து, லீலைகள் மிகுந்து-காமவிளையாடல்கள் மிகுந்து, மா வடுவை ஒத்த- மாவடுவுக்கு நிகரான-விழி மாதர்-கண்களையுடைய, பொதுமாதர்கள், சீருடன் அழைத்து-மரியாதையுடன் அழைத்து, வாய் கனிவு வைத்து-வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி, தேன் இதழ் அளித்து-தேன் போன்ற இதழைத் தந்து, அநுபோக சேர்வைதனை உற்று-காமநுகர்ச்சிக் கலவியில் உறவைத்து, மோசம் விளைவித்து-மோசம் விளையுமாறு செய்து, சீர்மை கெட வைப்பர்- நன்மையழியுமாறு செய்வார்கள்; உறவு ஆமோ-அத்தகைய மாதரது உறவு ஆகுமோ?(ஆகாது).

பொழிப்புரை

கச்சினைக் கிழித்து, மேருமலையையும், இழிவாக்கி, சிறந்த பொன் போன்ற குடம்போல் விளங்கி, அன்பாகிய ஆதரவை வைத்து, மிகுந்த அழகைக்கொண்டு, மாலைகள் நெருங்கிய தனங்களையுடைய பெண்மணியும், அணிவடம் பூண்ட புயங்களை