பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 361

 

யுடையவளும், மோகினியும், சாமர்த்தியம் நிறைந்தவளும், மயில் போன்றவளும் ஆகிய உமாதேவியார் பெற்ற புதல்வரே! சூரபன்மனையும், அவனுடைய சுற்றத்தாரையும் அழித்து வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி, சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமிதமுடையவரே! நீண்ட காதணியை எட்டியும், மன்மதனை மருளுமாறு செய்தும், மாயத்தில் வல்ல இயமனுடைய உறவு பூண்டும், நல்ல தவத்தை அழித்து, காமலீலைகள் மிகுந்து மாவடுவினை நிகர்த்த கண்களையுடைய பொதுமாதர்கள் மரியாதையுடன் அழைத்து, வாய்ப் பேச்சில் இனிமையை வைத்துப் பேசி, தேன் போன்ற வாயிதழைக் கொடுத்து, காமநுகர்ச்சிச் சேர்க்கையில் வைத்து மோகத்தைச் செய்து, நன்மையை அழிப்பார்கள். இத்தகைய அப்பொது மகளிரின் உறவு ஆகுமோ?ஆகாது.

வார்குழையை யெட்டி:-

கண்ணுக்கு உரிய சிறந்த இலக்கணங்களுக்குள் ஒன்று நீளமாக இருத்தல். காதுவரை கண்கள் நீண்டிருக்கின்றன என்று இங்கே கூறுகின்றார்.

வேளினை மருட்டி:-

வேள்-விருப்பம். விருப்பத்தைச் செய்கின்றவன் மன்மதன். அம்மதனையே மருளுமாறு செய்கின்றதாம் கண்கள். அத்துணை அழகியவை.

மாய நமனுக்கு முறவாகி:-

நமன் பல மாயங்களைச் செய்து உயிர்களைக் கொல்லுவான. இவர்களின் கண்களும் பலமாயங்கள் செய்து ஆடவரைக் கொல்லும். அதனால் கொலைத் தொழிலில் இயமனுடன் உறவு ஆகியது.

மாதவமழித்து:-

முனிவர்கள்புரியும் தவநிலையை அழிக்கும் ஆற்றல் படைத்தது அக்கண்கள்,

லீலைகள் மிகுந்து:-

பலப்பல காமலீலைகள் புரியவல்லது.

மாவடுவை யொத்தவிழி:-

மாம்பிஞ்சினைப் பிளந்தால் கண்களைப்போல் காட்சிதரும். அதனால் கண்ணுக்கு உவமை மாவடு.