சேர்வைதனையுற்று:- உற்று-உறவைத்து. ஆடவரைத் தம்முடன் கூட்டுறவில் வைத்து மோசம் புரிவார்கள். வாரினையறுத்து:- வார்-கச்சு. அக்காலங்களில் தனங்களை வார்கொண்டு கட்டுவர். பழங்காலத்து சிற்பங்களைப் பார்த்தால் இது விளங்கும். மேருவை மறித்து:- பெரிய மலையாகிய மேருமலையைத் தனக்கு நிகரில்லை என்று தடுத்துக் கீழாகச் செய்யும் அழகியதனம். வாரவணை வைத்தும்:- வாரம்-அன்பு.அணை-ஆதரவு. அன்பினால் ஆதரவை வைத்து உலகங்களைக் காக்குந் தன்மையது அம்பிகையின் தனபாரங்கள். தோரணி புயத்து:- தோரை-அணிவடம். தோரை என்ற சொல் தோர் எனக் குறுகிற்று. யோகினி:- யோகத்தையுடையவள் யோகினி. கருத்துரை பழமுதிர்சோலைப் பரமனே! மாதர் உறவு கூடாது. அகரமுமாகி யதிபனு மாகிய யதிகமு மாகி அகமாகி அயனை வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையுமாகி வருவோனே இருநிலமீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே. |