பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 363

 

பதவுரை

அகரமும்ஆகி-எழுக்களில் அகர எழுத்தாகியும், அதிபனும் ஆகி- எல்லாவுலகங்கட்குந் தலைவராகியும், அதிகமும் ஆகி-எல்லாவற்றிற்கும் மேம்பட்டவராகியும், அகம் ஆகி-முக்தி வீடாகியும், அயன் என ஆகி- நான்முகனாக நின்று உலகத்தைப் படைத்தும், அரி என ஆகி-திருமாலாக நின்று உலகத்தைக் காத்தும், அரன் என ஆகி-உருத்திரமூர்த்தியென நின்று எல்லாவற்றையும் அழித்தும், அவர் மேலாய்-அம்மூவர்க்கு மேலான முதல்வராகியும், இகரமும் ஆகி-சமீபத்தில் இருப்பவருமாகியும், எவைகளும் ஆகி-எல்லாப் பொருள்களுமாகியும், இனிமையும் அகி-இனியைாகியும், வருவோனே-வருபவரே! மகபதி ஆக மருவும்-நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்து யாக பதியாக விளங்கி, வல அரி-வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன், மகிழ்களி கூரும் வடிவோனே-மிக்க மகிழ்ச்சியடையும் பேரழகுடையவனே! வனம் உறைவேடன் அருளிய பூஜை-காட்டில் வாழுகின்ற வேடுவன் செய்தருளிய வழிபாட்டை, மகிழ்-களிப்புடன் ஏற்றுக்கொண்ட, கதிர்காமம் உடையோனே-கதிர்காமம் என்னுந் திருத்தலத்தை உடையவரே! செககண சேகு தகுதிமி தோதி திமி னெ ஆடும்-என்ற தாள இசையுடன் நடனஞ்செய்கின்ற, மயிலோனே-மயில்வாகனத்தை யுடையவரே! திருமலிவு ஆன-செல்வம் மலிந்து கிடக்கும், பழமுதிர்சோலை மலை மிசை மேவு- பழமுதிர் சோலை மலைமீது எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! இரு நில மீதில்-பெரிய நிலவுலகத்தின் கண், எளியனும் வாழ- எல்லோரும் உய்வு பெறுவதுடன் அடியேனும் உய்ந்து ஈடேறும் பொருட்டு, எனது முன் ஓடிவரவேணும்-என்முன் ஓடிவந்து ஆட்கொள்வீர்.

பொழிப்புரை

எழுத்துக்களில் முதன்மை பெற்ற அகர எழுத்தாகியும், எல்லாவுலகங்கட்குந் தலைவராகியும், எல்லாவற்றிற்கும் மேம்பட்ட வராகியும், பரகதியாயும், நான்முகனாகியும், திருமாலாகியும், உருத்திர மூர்த்தியாகியும், அம்மூவருக்கும் மேற்பட்டவராகியும், சமீபத்தில் உள்ளவராகியும், எல்லாமானவராகியும், இனிமையாக விளங்குபவருமாகியும் வருபவரே! நூறு அசுவமேதயாகங்களைப் புரிந்து மகபதியென்று பேர் பெற்றவனும் வலன் என்ற அசுரனைக் கொன்றவனும் ஆகிய தேவர் கோமான் மிக்கமகிழ்ச்சியுறுகின்ற கட்டழகுடையவரே! வனத்தில் வாழுகின்ற வேடன் செய்த வழிபாட்டை ஏற்று மகிழ்ந்து அருள் புரிந்த கதிர்காமம் என்னும்திருத்தலத்தை யுடையவரே! செககண சேகு தகுதிமி தோதி திமி என்ற தாள இசையுடன் ஆடுகின்றமயிலை வாகனமாக