உடையவரே! செல்வம் மலிந்துள்ள பழமுதிர் சோலை யென்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமித முடையவரே! பெரிய நிலவுலகின்கண் எல்லோரும் ஈடேறவும் அடியேன் உய்வு பெறவும் என்முன் ஓடிவந்து ஆட்கொள்ள வேண்டும். விரிவுரை அகரமுமாகி:- “அகரமுதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு. என்ற தெய்வப்புலவர் திருவாக்கை யறியாதார்? எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையது. அகரமின்றி ஏனைய எழுத்துக்கள் இயங்காது; இறைவனின்றி உலகமும் உயிரும் இயங்கா. அகரமும் எல்லா எழுத்தக்களில் சிவணிக் கொண்டிருக்கிறது; இறைவனும் எல்லாப் பொருள்களிலும் சிவணி நிற்கின்றனன்; யாதொரு முயற்சியுமின்ற வாய் திறந்த மாத்திரத்தில் அகர உச்சரிப்பு உண்டாகின்றது; அதுபோல் இறைவன் தானே இயங்குபவன்; அகரத்திற்குள் அ,உ,ம,என்ற மூன்றெழுத்தும் அடங்கியிருப்பதை நுனித்துணர்க. அதுபோல் இறைவன் முத்தொழிலையும் இயற்றுபவன்; அகரத்திற்குள் ஒரு பகுதியுள் அருளெழுத்தாகிய வகரமும் அடங்கியிருக்கு மாறு காண்க; இறைவனும் அருளோடு கூறியிருப்பவன். அகரம் தூரத்திலுள்ள பொருளைச் சுட்டுவது; அதுபோல் இறைவனும் தூய்மையில்லாதர்க்குச் சேய்மையிலுள்ளவன். அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. - திருவருட்பயன் பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் வாராய பல பொருளுங்கடலு மண்ணுமலை யுளவுங்கடலுளவு மணலும்வானு மூராதவான் மீனுமணுவுமற்றை யுள்ளனவு மளந்திடலா மோகோவுன்னை யாராலு மளப்பரி தென்றனந்த வேதமறைந்திளைக்கவதி தூரமாகுந்தேவே. - திருவருட்பா அகரமென வறிவாகி யுலகமெங்கு மமர்ந்தகர வுகரமக ரங்க டம்மாற் பகருமொரு முதலாகி வேறு மாகிப் பல்வேறு திருமேனி தரித்துக்கொண்டு |