பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 365

 

புகரில்பொரு ணான்கினையு மிடர்தீர்ந் தெய்தப் போற்றுநருக்
கறக்கருணை புரிந்தல் லார்க்கு
நிகரின்மறக் கருணைபுரிந் தாண்டுகொள்ளு நிருமலனைக்
கணபதியை நினைந்து வாழ்வோம்.  - விநாயக புராணம்.

அதிபனுமாகி:-

முருகப்பெருமாளே தனிப்பெருந் தலைவர்;

“எந்தக் கடவுளும் என்கோள் போழ்
   கந்தக்டவுளை மிஞ்சாதே”           - பாம்பனடிகள்.

“அரனார்க் கதிக பொருள் காட்டதிப
   அடியார்க் கெளிய பெருமாளே”
                      -(நிலையாப்பொருளை) திருப்புகழ்

என்று அருணகிரியார் கூறும் அருமையினும் அருமையாகிய அருள்வாக்கை யுன்னுக.

அதிகமுமாகி:-

எல்லாவற்றிக்கும் மேம்பட்டவர் குமாரமூர்த்தி; “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமுமில்லை, சுப்மண்யருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்று பழமொழியும் கருதி வாக்கியங்களும் இதனை வற்புறுத்தும்.

அகமாகி:-

அகம்-வீடு; இது முத்தி வீட்டைக் குறிக்கின்றது; முத்தி வீட்டிற்கு தலைவனும் முத்திவீடாக விளங்குபவனும் முருகனே யாகும்.

“கதிக்கு நாதனீ”             - (விலைக்கு) திருப்புகழ்

“தெரிசன பரகதியானாய்”            - (அவகுண) திருப்புகழ்

என்ற அருள் வாக்குகளை யுய்த்துணர்க.

அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய்:-

பிரமதேவராகவும் திருமாலாகவும், உருத்திரராகவும் நின்று முத்தொழிலை யிற்றுபவர் முருகப்பெருமாளே.

இதனைத் திருமால் இந்திரனிடங் கூறுமாறு காண்க.

பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாசி நல்கும்
என்னுரு வாகிக்காக்கும் ஈசன்போ லிறுதி செய்யும்
மின்னுரு வென்ன யார்க்கும் வெளிப்படை போலு மன்னான்
தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே.

மூவராகியும்மூவர்காணாத முதலாகியும் எம்பெருமான் விளங்குகின்றனன் என்பதனைப் பல இடங்களிலும் சுவாமிகள் கூறுவதை ஆங்காங்கு காண்க.