பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 367

 

வனமுறை வேடனருளிய பூஜை மகிழ் கதிர்காமம்:-

இது கதிர்காமம் என்ற ஈழநாட்டுத் திருத்தலத்தில் உரு வேடன் அன்புருவாகிப்பூசித்து அருள் பெற்ற வரலாற்றைக் குறிக்கின்றது.

கருத்துரை

எல்லாமாய்நின்ற இறைவரே! கட்டழகுடையவரே! கதிர் காம வேலவரே! மயிலேறும் வள்ளலே! பழமுதிர் சோலை மேவும் பரமரே! உலகமும் அடியேனும் வாழ என்முன் விரைந்து வந்தருள்வீர்.

4

இலவிதழ் கோதிநேதி மதகலை யாரவார
             இளநகை யாட ஆடி                               மிகவாதுற்
       றெதிர்பொரு கோர பாரம் ருகமத கோலகால
             இணைமுலை மார்பிலேற                       மதராஜன்
கலவியி லோடி நீடு வெழுவித தாகபோக
             கரணப்ர தாபலீலை                               மடமாதர்
       கலவியின் மூழ்கியாழு மிழிதொழி லேனுமீது
             கருதியஞான போத                          மடைவேனோ
கொலைபுரி காளிசூலி வயிரவி நீலி மோடி
             குலிசகு டாரி யாயி                               மகமாயி
       குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி
             குணவதி யால வூணி                            யபிராமி
பலிகொள்க பாலி யோகி பரமகல்யாணி லோக
             பதிவ்ரதை வேத ஞானி                    புதல்வோனே
       படையொடு சூரன்மாள முடுகீய சூரதீர
             பழமுதீர் சோலைமேவு                          பெருமாளே

பதவுரை

கொலை புரி காளி-பகைவரைக் கொலை செய்கின்ற காளி, சூலி-சூலத்தை யேந்தியவள், வயிரவி-வயிரவி நீலி-நீல நிறத்தினள், மோடி-து்ாகை, குலிச குடாரி ஆயி-குலிசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியுள்ள அன்னை, மகமாயி- மகாமாயி, குமரி-குமரி, வராகி-வராகி, மோதி-மோகத்தைச் செய்பவள், பகவதி- ஆறுகுணங்களையுடையவள், ஆதி-முதன்மையானவள், சோதி- சோதிமயமானவள், குணவதி-அருங்குணங்களையுடையவள், ஆல ஊணி-நஞ்சு உண்டவள், அபிராமி-