அழகி, பலிகொள் கபாலி-பலி ஏற்கும் பிரம காபலத்தையுடையவள்; யோகி- யோகஞ் செய்பவள்; பரம கல்யாணி-சிறந்த கல்யாணி; லோகபதிவ்ரதை - உலகம் போற்றும் பதிவிரதை, வேத ஞானி-வேதங்கள் அறிந்தவள் ஆகிய பார்வதி தேவியின், புதல்வோனே-திருக்குமாரரே! படையொடு சூரன் மாள- படைகளுடன் சூரபன்மன் இறக்க, முடுகிய சூரு-எதிர்த்து ஓட்டிய சூரரே! தீர- தீரமூர்த்தியே! பழமுதிர் சோலை மேவு-பழமுதிர் சோலையில் விரும்பியிருக்கும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! இலவு இதழ் கோதி-இலவம் பூவைப் போன்ற சிவந்த இதழை திருத்தி, நேதி-முறையாக, மதகலை ஆரவார- மன்மதனுடைய கலைகளை கர்வமும், இளநகை, ஆட ஆடி-புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, திருமுக வாது உற்று-அதிக தர்க்கங்களைப் பேசி, எதிர்பொரு-எதிரில் தர்கும்,கோர பார-ஆச்சந்தரும் பாரமான, ம்ருகமத கோல கால-கஸ்தூரிஅணிந்து ஆடம்பர மாகவுள்ள, இணை முலைமார்பில் ஏற-இரு தனங்களும் மார்பில் பொருந்த, மதராசன்-மன்மதராஜனுடைய, கலிவியில் ஓடி- புணர்ச்சியில் வேகமாக ஓடீ, நீடு வெகு விதமாக-நெடுநாள் பலவிதமான அன்புடன், போக கரணப்ரதாப லீலை-போக சுகத்துடன் கூடிய பேர் பெற்ற கலவி விளையாட்டுக் களையுடைய, மடமாதர்-பொதுமாதர்களுடைய, கலவியில் மூழ்கி-புணர்ச்சியில் முழுகி, ஆழும் இழி தொழிலேனும்-ஆழ்கின்ற இழிந்த தொழிலையுடைய அடியேனும், மீது கருதிய ஞான போதம் அடைவேனோ?- மேலாகக் கருதப்பட்ட ஞான அறிவை அடைவேனோ? பொழிப்புரை பகைவரைக் கொலை செய்கின்ற காளி, திரிசூலத்தை யேந்தியவள், பயிரவி, நீல நிறத்தையுடையவள், துர்க்கை, குலிசத்தையும், அங்குசத்தையும், ஏந்தியுள்ள அன்னை மகமாயி, குமரி, வாகி, மோகி, பகவதி, ஆதி, சோதி, குணவதி, நஞ்சு உண்டவள், அழகி, பிட்சை வாங்கும் கபாலி, யோகி, பரமகல்யாணி, உலகம் போற்றும் பதிவிரதை, வேதங்களை அறிந்தவள் ஆகிய பார்வதி தேவியின் குமாரரே! படைகளுடன் சூரபன்மன் இறக்கும்படி அவனை ஓட்டிய சூரரே! தீரமூர்த்தியே! பழமுதிர் சோலையில் எழுந்தருளிய பெருமித முடையவரே! இலவம் பூவைப் போன்ற சிவந்த வாயிதழ்களை வகைப்படுத்தி முறையாக, மன்மத கலைகளை ஆரவாரமும் புன்சிரிப்பும் தோன்ற விளையாடி, அதிக தர்க்கங்களைப் பேசி, எதிரில் தாக்கும் அச்சந்தரும் பாரமான கஸ்தூரி பூசிய ஆடம்பரமான இரு தளங்கள் மார்பில் பொருந்த, மன்மதராஜனுடைய காமலீலைச் சேர்க்கையில் வேகமாக ஓடி நெடு நாள் பலவிதமான போகசுகத்தை விளைவிக்கும் புணர்ச் |