பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 371

 

இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையால் பொருள் சிவன் என்றருளாலே உணர்ந்தறிந்தார்.
                                                        - பெரியபுராணம்

இன்ன இன்ன வினை செய்தான் இன்ன இன்ன வகையாக, இன்ன இன்ன இடத்திலே பிறக்க வேண்டும். என்பது இறைவனது அருட்கட்டளை.

எனவே, பிறப்புக்குக்காரணமான வினையை யொழித்தால் பிறப்பு எய்தாது.

நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞானநடம்:-

மாலும் அயனுங்காணாத அதியற்புதமான ஞான நடனம் புரிந்து எளியேனுக்கு அருள் புரிவீர்.

ஆரமுதமானதந்தி:-

ஆர் - நிறைவு. அமுதவல்லி-தெய்வயானை.

கருத்துரை

சோலைமலை மேவிய முருகா! ஞானநடனம் புரிந்து வந்தருள்வீர்.

6

சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு   தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று   தெருவூடே
வாலவயதான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடுசிந்தை   மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழுமென்றன்
மாயவினை தீர அன்பு    புரிவாயே
சேலவள நாடனங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன்    மணிமேடை
சேருமம ரேசர்தங்க ளூரிதென வாழ்வு தந்த
தீரமிகு சூரை வென்ற   திறல்வீரா
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை   களிகூர
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த   பெருமாளே