பதவுரை சேலவளநாடு-சேல் மீன்கள் நிறைந்த வளப்பமான நாடு, அன்னங்கள் ஆர- அன்னங்கள் நிரம்பிய, வயல் சூழும் இங்சி-வயல்கள் சூழ்ந்துள்ள மதில்கள், சேண் நிலவு தாவ-ஆகாயத்தில் உள்ள நிலாவை எட்ட, செம்பொன் மணி மேடை சேரும்-செம்பொன்னாலாகிய மணி ஊர் இது என்று சொல்லும்படி, வாழ்வு உகந்த-தத்தம் ஊர் வாழ்வின் மகிழ்ச்சி கொண்ட, தீரமிகு சூரை வென்ற-தைரியம் மிகுந்த சூரனை வென்ற திறல் விரா-வலிமை மிக்க வீரமூர்த்தியே! ஆலவிடம் மேவு கண்டர்-ஆலவிடம் பொருந்திய கண்டத்தை உடையவரும், கோலமுடன் நீடு மன்று உள்-அழகுடன் நீண்ட சபையில், ஆடல்புரி-நடனம் புரிகின்றவருமாகிய, ஈசர் தந்தை களிகூர-தலைவராகிய தந்தை மகிழ்ச்சி மிகவும் அடைய, ஆன மொழியே பகர்ந்து-சிறந்ததான உபதேச மொழியை உபதேசித்து சோலைமலை மேவு கந்த-சோலைமலையில் வீற்றிருக்கும் கந்தவேளே! ஆதி முதல் ஆக வந்த-ஆதி முதல்வராய் விளங்கும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! சீலம் உள்ள தாய- நல்லொழுக்கமுள்ள தாய், தந்தை-பிதா, மாது-மனைவி, மனை-வீடு ஆன மைந்தர்-ஆகிய மக்கள், சேரு பொருள் ஆசை-சேர்ந்துள்ள பொருள் ஆகிய இவற்றில் ஆசை கொண்டு, நெஞ்சு தடுமாறி-மனம் தடுமாற்றம் அடைந்து, தீமை உறுமாயை கொண்டு-குற்றத்தைத் தருவதான மாயையடைந்து, வாழ்வு சதம் ஆம் இது என்று-இவ்வாழ்வே நிலையானதாம் என்று எண்ணி, தேடினது போக என்று-தேடிய பொருள் யாவும் தொலைந்துபோக வேண்டி, தெரு ஊடே-நடுத் தெருவில்! வால வயது ஆன-இளம்வயதினராய், கொங்கை மேரு- தனங்கள் மேருமலை போலவும், நுதல் ஆன திங்கள்-வெற்றி பிறைச் சந்திரனைப் போலவும் கொண்டுள்ள, மாதர் மயலோடு சிந்தை - பொது மாதர்களின் மீதுள்ள ஆசைமயக்கத்தால், அடியேனுடைய மனம், மெலியாமல்- மெலிந்து போகாமல், வாழுமயில் மீது வந்து-என்றும் வாழ்கின்ற மயிலின் மீது தேவரீர் வந்து, தாள் இணைகள் தாழும்-உமது இரு பாதங்களையும் பணிகின்ற, என்றன் மாய விளைதீர-அடியேனுடைய, மாயவினை அழிய, அன்பு புரிவாயே- உமது அன்பைத் தருவீராக. பொழிப்புரை சேல் மீன்கள் நிறைந்த நீர்வளமுடைய நாடு, அன்னங்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்துள்ள மதில்கள் விண்ணில் உள்ள சந்திரனைத் தீண்ட, செம்பொன்மயமான மணி மேடைகள் சேர்ந்தனவாய், இந்திரருடைய நகரம் இது என்று சொல்லும்படி வணங்கும் தத்தம் ஊர் வாழ்வில் மகிழ்ச்சி மிகுந்த, தைரியம் உள்ள சூராதியவுணர்களை வென்ற விறல் வீரமூர்த்தியே! ஆலகால விடம் |