பக்கம் எண் :


374 திருப்புகழ் விரிவுரை

 

கருத்துரை

சோலைமலை மேவு சிவகுருவே! மாயவினை தீர அன்புதருவீர்.

7

வீரமத னூல்வி ளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியி னான்ம யங்கி   புலிமீதே
வீசுகையி னாலி தங்கள் பேசுபமவர் வாயி தஞ்சொல்
வேலைசெய்து மால்மி குந்து   விரகாகிப்
பாரவச மான வங்க ணீடுபொருள் போன பின்பு
பாதகனு மாகி நின்று   பதையாமல்
பாகம்வர சேர ன்பு நீபமலர் சூடு தண்டை
பாதமலர் நாடி யென்று     பணிவோனே
பூரணம தான திங்கள் சூடுமர னாரிடங்கொள்
பூவையரு ளால்வ ளர்ந்த    மருகோனே
பூவுல கெலாம டங்க வோரடியி னால ளந்த
பூவைவடி வானு கந்த    மருகோனே
சூரர்கிளை யேத டிந்து பாரமுடியேய ரிந்து
தூள்கள்பட நீறு கண்ட    வடிவேலா
சோலைதனி லேப றந்து லாவுமயி லேறி வந்து
சோலைமலை மேல மர்ந்த    பெருமாளே

பதவுரை

பூரணம் அது ஆன திங்கள் சூடும்-என்றுந் தேயாது வளராது ஒரு தன்மையாயிருக்கும் சந்திரனைச் சூடியுள்ள, அரனார் இடம் கொள்-சிவ பெருமானது, இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ள, பூவை அருளால் வளர்ந்த- நாகண வாய்ப் பட்சிபோன்ற பார்வதி தேவியின் திருவருளால் வளர்ந்த, முருகோனே-முருகக் கடவுளே! பூ உலகு எலாம் அடங்க-மண்ணுலக முழுவதும் அடங்குமாறு, ஓர் அடியினால் அளந்த-ஒரு அடியினால் அளந்தருளி, பூவை வடிவான் உகந்த-காயாம் பூ வண்ணராகிய திருமால் மகிழ்கின்ற, மருகோனே-திருமருகோனே! சூரர்கிளையே தடிந்து-சூரர்களின் கூட்டங்களை அழித்து, பார முடியே அரிந்து-அவர்களது கனத்த முடிகளை அரிந்து, தூள்கள்பட நீறு கண்ட-அவர்கள் பொடிபட்டுச் சாம்பலாகும்படிச் செய்த, வடிவேலா-கூரிய வேலாயுதரே! சோலைதனிலே பறந்து உலாவும்- சோலைகளில் பறந்து உலாவுகின்ற,