பூவுலகெலா மடங்க ஓரடியினாலளந்த:- இந்த உலகமெல்லாம்திருமால் ஓரடியால் அளந்து அருளினார். “மூவடி கேட்டன்று மூதண்டகூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்” - கந்தரலங்காரம் (15) பூவை வடிவான:- பூவை-காயாம் பூ. இது நீலநிறமுடைய அழகிய மலர். திருமாலின் நிறமும் நீலம். காயாம் பூ வண்ணன். கருத்துரை சோலைமலை மேவு முருகா! உனது பாதமலரைப் பணிய அருள்செய்யும். வாரண முகங்கி ழிந்து வீழவு மரும்ப லர்ந்து மால்வரை யசைந்த நங்கன் முடிசாய வாளகிரி யாண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்து மாதவ மறந்து றந்து நிலைபேரப் பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம் போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து பூசனைசெய் தொண்ட னென்ப தொருநாளே ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் ஆகுதியிடங்கள் பொங்கு நிறைவீதி ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை யாமரவந்த லம்பு துறைசேரத் தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற சூழ்மணிபொன் மண்டபங்கள் ரவிபோலச் சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து கந்த பெருமாளே. பதவுரை ஆரணம் முழங்குகின்ற-வேதங்கள் முழங்குகின்ற, ஆயிரம் மடம்-ஆயிரக் கணக்கான மடங்களும், தவங்கள்-முனிவர்களின் தவங்களும், ஆகுதி இடம் கொள்-ஓமப்புகை யென்ற இவைகள் நடைபெறும் இடங்களும், பொங்கும் நிறை வீதி-விளங்குகின்ற நிறைந்த வீதிகளும், ஆயிரம் முகங்கள் கொண்ட- பலகிளையாகப் பரந்து வருகின்ற, நூபுரம் |