இரங்கு கங்கை-நூபுர கங்கை இரங்கி வந்து, ஆர அமர வந்து அலம்பு துறைசேர-நிரம்பி ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும் நீர்த்துறைகள் பொருந்த, தோரணம் அலங்கு-தோரணங்கள் அசையும், துங்க கோபுரம் நெருங்குகின்ற, பரிசுத்தமான கோபுரங்கள் நெருங்கி நின்று, சூழ் மணி பொன் மண்டபங்கள்- சூழ்ந்துள்ள பொன்னும் மணியும் பதித்த மண்டபங்களும், ரவி போல-சூரியன் போல, சோதியில் மிகுந்த-ஒளி மிகுந்த, செம்பொன் மாளிகை விளங்குகின்ற- அழகிய மாளிகைகளும் விளங்குகின்ற, சோலைமலை வந்து உகந்த- சோலைமலையில் வந்து மகிழ்ந்து வீற்றிருக்கும், பெருமாளே - பெருமையிற் மிகுந்தவரே! வாரண முகம் கிழிந்து வீழவும்-யானையை ஒப்பிடலாம் என்றால் அது முகம் ஒரு காலத்தில் சிவபிரானால் கிழிபட்டு விழுந்தது, அரும்பு மலர்ந்து தாமரையரும்பை ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது, மால் வரை அசைந்து-பெரிய மலையாகிய கயிலையை ஒப்பிடலாம் என்றால் அது இராவணனால் அசைவுற்றது, அநங்கன் முடி சாய-மன்மதனுடைய மகுடத்தை ஒப்பிடலாம் என்றால் சிவபெருமான் எரித்தபோது அந்த முடி சாய்ந்து வீழ்ந்தது, வாளகிரி-சக்கர வாளகிரி போல, அண்டர் அண்டகோளம் உற நின்று எழுந்த-தேவலோகத்தையும் அண்டர்கோளத்தையும் எட்டும்படி நிமிர்ந்து எழுந்து, மாதவம் அறம் துறந்து நிலைபேர-மகாதவசிகளும், தங்கள் தரும நெறியைக் ககைவிட்டு நிலைகுலையவும், பூரண குடம் கடிந்து- பூரணமாகத் திரண்ட குடத்தைவிட்டு நிலைகுலையவும், பூரண குடம் கடிந்து- பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று, சீத களபம் பனைந்து-குளிர்ந்த சந்தனக் கலவை தரித்து, பூசலை விரும்பு காமலீலைப் போரை விரும்புகின்ற, கொங்கை மடவார்தம்-தனங்களையுடைய பெண்களின், போக சயனம் தவிர்ந்து-இன்பத்தை நுகரும் படுக்கையை விட்டு, உன் ஆடக பதம் பணிந்து- உமது பொன் மயமான திருவடியைப் பணிந்து, பூசனை செய்தொண்டன் என்பது ஒரு நாளே-அத்திருவடியைப் பூசிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் எனக்கு உண்டாகுமோ? பொழிப்புரை வேதங்கள் முழங்குகின்ற ஆயிரக்கணக்கான மடங்களும், தவம் யாகம் இவை நடைபெறும் இடங்களும், விளங்குகின்ற நிறைவுள்ள வீதிகளும், ஆயிரங் கிளைகளாகப் பிரிந்து வருகின்ற சிலம்பாறு நிரம்பி ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும் நீர்த்துறைகள் பொருந்த, தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரமும், நெருங்கி நின்று சூழ்ந்துள்ள பொன் மிகுந்த செம்பொன் மாளிகைகளும் விளங்குகின்ற சோலைமலை யானையை ஒப்பிடலாம் என்றால், யானையின் முகம் ஒரு காலத்தில் சிவபிரானால் கிழிபட்டு விழுந்தது, தாமரை அரும்பை ஒப்பிடலாம் என்றால் அது |