பக்கம் எண் :


380 திருப்புகழ் விரிவுரை

 

மன்மதனுடைய மணிமகுடம் தனத்திற்கு உவமையாகத் திகழும். அதிலும் ஒரு பிழை உளது. அது என்ன?

மன்மதனைச் சிவபெருமான்நெறிக்கண்ணால் எரித்தபோது முடி சாய்ந்து வீழ்ந்தது. இத்தனம் அங்ஙனம் சாயாமையால் மன்மதனுடைய மகுடமும் நிகராகாது.

என்று அந்தந்த உவமைகளில் உள்ள குறைகளைக் கூறி விலக்கினார். இவையாவும் கவித்திறமை யாகும்.

வாளகிரி யண்டரண்ட கோளமுற நின்றெழுந்து:-

சக்ரவாளகிரி போல்ஓங்கி விண்ணுலகம் அண்டகோளகை வரை தனம் உயர்ந்துள்ளது என்ற இந்த நயம் உயர்வுநவிற்சி.

மாதவ மறந்துறந்து நிலைபேர:-

மாதவ முனிவர்கள் இத்தனபாரத்தைக் கண்டவுடன் தமது தவம் குலைந்து, தருமம் தவிர்ந்து தடுமாறுகின்றார்கள்.

.....................................................”துறவினர் சோரச் சோர
நகைத்து”                               திருப்புகழ்.

மாயையைக் கண்டு காசிபரும், மேனகையைக் கண்டு விசுவாமித்திரரும் தவங்குலைந்ததே சான்று.

பூரண குடங்கடிந்து:-

நிறை குடத்தையும் தனக்கு நிகரில்லையென்று விலக்குகின்ற சிறந்த தனம்.

போக சயனம்:-

மாதரின்கலவியின்பத்துடன் கூடிய பஞ்சணையை விலக்கிவிட வேண்டும். அது நோய்க்கிடமானது. தூய்மையில்லாதது. அணுத்துணையின்பம் பயந்து மலையளவு துன்பம் பயப்பது.

“மடவாரோடு
பொருந்தணை மேல் வரும்பயனைப் போக மாற்றி
பொது நீக்கித் தனைநினைய வல்லார்க் கென்றும்
பெருந்துணை”                   - அப்பர்.

தவிர்ந்துனாடக பதம் பணிந்து:-

தவிர்ந்து உன் நாடக பதம். உமது நடனம் புரியும் பாதம் என்றும் பொருள் கொள்ளலாம்.

தவிர்ந்து உன் ஆடக பதம். ஆடகம்-பொன். பொன் மயமான பாதம்.

ஆரண முழங்குகின்ற ஆயிரமடம்:-

பழமுதிர் சோலையின் பெருமையை இத்திருப்புகழின் பிற்பகுதி முழுவதும் கூறுகின்றது.