பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 381

 

வேதியர்கள் மடங்களில் இருந்து சதா வேதபாராயணம் புரிகின்றார்கள்.

தவங்கள் ஆகுதியிடங்கள்:-

தவம் புரிந்துகொண்டு உலக நலனுக்காக வேள்வி புரிகின்றார்கள்.

ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை:-

பழமுதிர் சோலையில் மிகவும் பெருமை பொருந்தியது நூபுர கங்கை. இது சிலம்பாற எனப்படும்.

“சிலம்பாறு பாயுந் திருமாலிருஞலு சோலையே” - பெரியாழ்வார்

“ஆமாநல் ஏறு சிலைப்பச்சேண் நின்று
   இழுமென இழிதரும் அருவிப்
   பழமுதிர்சோலை மலைகிழ வோனே” - திருமுருகாற்றுப்படை.

கருத்துரை

பழமுதிர்சோலைப் பரமனே! உனது திருவடியைப் பூசிக்குந் திருத்தொண்டு தந்தருள்வீர்.

9

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலசபொற்சபையு மிந்துவாகை
ஆரமூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதி நுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தமொடு
மோது வேதசா சத்தியடி யுற்றதிரு  நந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல் வெளிவிட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய்
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்