பக்கம் எண் :


382 திருப்புகழ் விரிவுரை

 

மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரெழுபி றப்பையும றுத்தவுமை தந்தவாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகி
ஆருர் வேலூர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில் நாகை
காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
நாவ லூர்திருவே யெண்ப்பத்தியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே.

பதவுரை

வாசி வாணிகன்என-குதிரை வியாபாரியாக வந்து குதிரை விற்று-மதுரையில் பாண்டியனிடம் குதிரை விற்று, மகிழ்வாதவூரன் அடிமை கொளும்-அதனால் மனம் மகிழ்ந்த திருவாதவூரை அடிமை கொண்டவரும், க்ருபைக் கடவுள்- கருணைக் கடவுளும், மாழைரூபன்-பொன்னிறமுடையவரும், முகம் மத்திகை விதத்து அருண செம் கையாளி - ஒலிக்கின்ற குதிரைச் சம்மட்டியால் குதிரையைச் செலுத்துகின்ற வகை பொருந்திய ஒளியும் அழகும் உடைய திருக்கரத்தை யுடையவரும் ஆகிய சிவபெருமானுடைய, வாகு பாதி உறை சத்தி-இடப்பாகத்திலிருக்கும் ஆற்றலுடையவரும், கவுரி- பொன்னிறமுடையவரும், குதலை வாயின் மாது-மழலை மொழி பேசும் பெண்ணமுத மானரும், துகிர் பச்சை வடிவி-பவளங்கலந்த பச்சை நிறத்தையுடையவரும், சிவை-மங்கலம் பொருந்தியவரும், என் மாசு சேர் எழு பிறப்பையும், அறுத்த உமை-அடியேனுடைய குற்றமிக்க ஏழுவகையான பிறப்புக்களையும் அறுத்து ஆட்கொண்ட உமாதேவியாரும் ஆகிய அம்பிகை, தந்த வாழ்வே-பெற்றருளிய திருமைந்தரே! காசி-காசியம்பதி, ராமெசுரம்- திருவிராமேச்சுரம், ரத்னகிரி-வாட்போக்கி என்னும் இரத்தினகிரி, சர்ப்பகிரி திருச்செங்கோடு, ஆரூர்-திருவாரூர், வேலூர்-வேலூர், தெவுர்-தேவூர், கச்சி- காஞ்சிபுரம், மதுரை-மதுரையம்பதி, பயில்-திருப்பறியலூர், காலை- திருவானகை்கா, மூதுர்-பழமலை என்னும் விருத்தாசலம் (திருப்புனவாயில் எனினும் அமையும்) அருணகிரி-திருவண்ணாமலை, திருத்தணியல்- திருத்தணிகை, செந்தில்-திருச்செந்தூர், நாகை-நாகப்பட்டினம், காழி-சீகாழி, வேளூர்-புள்ளிருக்கும் வேலூர் என்னும் வைத்தீச்சுரன் கோயில், பழநிக்கிரி-