பக்கம் எண் :


384 திருப்புகழ் விரிவுரை

 

மழலை மொழி பேசும் மாதரசும், பவள நிறத்துடன் கூடிய பச்சை நிறமுடையவரும், மங்கலமானவரும், அடியேனுடைய ஏழு பிறப்பையும் அறுத்த உமாதியாருமாகிய பார்வதியம்மையார் பயந்த திருப்புதல்வரே! காசி, திருவிராமேச்சுரம், இரத்தினகிரி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சி, மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, பழமலை, திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீகாழி, புள்ளிருக்கும் வேளூர், பழநி, குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய திருத்தலங்களிலும், மிகவுந்திகழ்கின்றதும் சோலைகளுடன் கூடியதுமாகிய பழமுதிர்சோலையிலும் எழுந்தருளியுள்ள முத்தான்மாக்களால் புகழப்பெறுகின்ற தனிப்பெருந்தலைவரே! இனிய ஒளியைப் பரப்பி இடைகலை பிங்கலை யென்னும் இரு நாடிகளின் வழியாக ஒடிக்கழியும் பிராணவாயுவை நான்கு பக்கத்தையுடைய மூலாதாரத்திற் பொருந்தி, அங்கிருந்து சுழுமுனைநாடி வழியாக, சுவாதிஷ்டானம் முதல் ஆக்கினை யீறாகவுள்ள ஐந்து கமலத்திலும் ஓட்டி நிறுத்தி, அக்கினி சூரியன் சந்திரன் என்ற மூன்று மண்டங்களிலுஞ் செலுத்தி, பிரமந்திர கமலத்திலும் பொருந்த நிறுத்தி, அப்பால் ஆயிரத்தெட்டு இதழோடுங் கூடிய சோதி நிறைந்த வெளியாகிய துவாதசாந்த கமலம் வரை ஏழுதலங்களையும் பொருந்தச் செலுத்தி, சூரிய ஒளி வீசும் ஒளி மண்டலத்தில் பிரமநாதமானது ஒலிக்க அதனுடன் ஒருமித்து, மதிமண்டத்தில் கலாமிர்தம் பெருகிப் பாய அவ்வமிர்தப் பேற்றுடன், வேதங்கூறுகின்ற சர சத்திக்கு ஆதாரமாகவுள்ள ஸ்ரீ நந்தி ஒளியையும் ஊமையேனுக்குத் தெரிசிப்பித்து, தேவரீரது முத்தியைப் பெற பிரமந்திர வெளி வாசல் திறந்துவிட்டு இங்ஙனஞ் செய்வதால், உமது திருவருள் வலிமையால் விளங்குகின்ற அஷ்டாங்க யோகங்களும் இதனுடன் பொருந்தும் வகையை அடியேனுக்கு இன்று தந்தருளவேண்டும்.

விரிவுரை

ஆசைநாலு சதுர.........................இந்து வாகை:-

ஆசை-பக்கம்; நாலு சதுரக் கமலம்-மூலாதாரம். இடைபிங்கலை யென்ற இரு நாடிகளின் வழியே ஓடிக்கழியும் பிராண வாயுவை அங்ஙனஞ் செல்லவிடாது முதுகு தண்டின் நடுவே தாமரை நூல்போல் நுணுகியுள்ள கழுமுனை நாடி வழியே செலுத்துதல் வேண்டும். சிவயோகத்தின் கருத்தை மிகவும்