ஆனால் ஆராலுங்காணாத அரனார்:- “மதுரை மா நகரிற் குதிரை மாறியும் விண்புகழ் முடிமிசை மண்பொறை சுமந்தும் நீற்றெழின்மேனியின் மாற்றடிபட்டும்”. மாணிக்கவாசகரைத் தொண்டுகொண்டனர். ரத்னகிரி:- இது குளித்தலை ரயில்வே ஸ்டேஷனுக்குத் தெற்கே 6.30 மையில் உள்ளது. சர்ப்பகிரி:- திருச்செங்கோடு; நாகாசலம் என்றும் சொல்லப்படும். தேவூர்:- இத் திருத்தலம் கீழ்வேளூர் ஸ்டேஷனுக்கு தெற்கே 3 மையிலில் உள்ளது. தேவர்கள் சிவபெருமானிடம் மந்த்ரோப தேசம் பெற்ற அருமைத் தலம். குறுக்கை:- அட்டவீரட்ட தலங்களுள் ஒன்று; மன்மதனை எரித்த இடம். இது திரு அன்னியூரிலிருந்து வடமேற்கே மட்சாலை வழியே 3 மைல் சென்று அங்கு நின்று ஐயாவையன் வாய்க்காலுக்கு மேற்புரம் 1மைலிலுள்ளது. கருத்துரை காசிமுதல் ராமேச்சுரம் ஈறாக பல தலங்களிலும் பழமுதிர் சோலையிலும் எழுந்தருளிய எம்பெருமானே! பார்வதி பாலரே! சிவயோகம் எட்டும் எளிதில் எனக்குச் சித்திக்கும் வகை இன்றே அருள்புரிவீர். கருவாகியே தாயுக ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீது துயிற்றிய கருதாய் முலை யாரமு தத்தினி லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொரு ட்பதி சதமாமிது தானென வுற்றுனை நினையாத |