சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தணையோதி மெய்ஞ் ஞான முறச்செய்வ தொருநாளே செருவாயெதி ராமசு ரத்திரள் தலைமூளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு வருபேய்கள் திகுதாவுண வாயுதி ரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட சிலகூகைகள் தாமுந டித்திட அடுதீரா அருமாமறை யோர்களது தித்திடு புகர்வாரண மாதுத னைத்திக ழளிசேர்குழல் மேவுகு றத்தியை அணைவோனே அழகான பொன்மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலை வியப்புறு அலையாமலை மேவிய பக்தர்கள் பெருமாளே. பதவுரை செருவாய் எதிர்ஆம்-போரின் கண் எதிர்த்து வந்த, அசுர திரள்-அசுரர் கூட்டங்களின், தலை மூளைகளோடு நிணம் தசை-தலை மூளை கொழுப்பு இறைச்சி இவைகளை, திமிர் தாது உள-தேகக் கொழுப்பும் சத்த தாதுக்களும் படைத்த, பூத கணத்தொடு வரு பேய்கள்-பூதக் கூட்டங்களுடன் வந்த பேய்கள், திகுதா உணவு ஆய்-திகுதிகு என்று உணவாகக் கொண்டு, உதிரத்தினை-உதிரத்தை, பலவாய் நரி ஓடு குடித்திட-மிகுதியாக நரிகளுடன் குடிக்க, சில கூகைகள் தாமும் நடித்திட-சில கோட்டான்களும் கூட நடித்திட, அடு தீரா-கொன்றருளிய தீர மூர்த்தியே! அரு மா மறையோர்கள் துதித்திடும்- அரிய சிறந்த வேதியர்கள் துதிக்கின்ற, புகர் வாரண மாது தனை-அழகிய தெய்வயானை யம்மையையும், திகழ் அளிசேர் குழல் மேவு-விளங்குகின்ற வண்டுகள் சேரும் கூந்தலையுடைய, குறத்தியை அணைவோனே- வள்ளிநாயகியையும் தழுவுகின்றவரே! அழகு ஆன பொன்மேடை-அழகிய பொன்மயமான மேடைகளும், உயர்த்திடும் முகில் தாவிய சோலை- உயரத்திலுள்ள மேகத்தை யளாவிய சோலைகளும், வியப்பு உறு அலை ஆம் மலை மேவிய-அற்புதத்தையுங் கொண்டு நிறைந்த மலையில் வீற்றிருக்கும், பக்தர்கள்-அன்பர்கள் போற்றுகின்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! கரு ஆகியெ-கருவாய் அமைந்து, தாய் உதரத்தினில்-தாயின் வயிற்றில், உருவு ஆகவே-உருவம் பெற்று, கால், கை உறுப்பொடு-கால் கை என்ற உறுப்புக்களு |