பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 389

 

டன், கனிவாய் விழி நாசி உடல் செவி-இனிய வாய் கண் மூக்கு உடல் காது என்னும் அங்கங்களுடன், நறையாதர் கையிலே விழஏகி-மருத்துவச்சியின் கையில் விழும்படி வந்து, அணைதுயில் எனவே-படுக்கையில் தூங்கு என்று, மிகமீது துயிற்றி-மிகவும் பாராட்டிப் படுக்கையில் தூங்கச் செய்த, கருது ஆய் முலை ஆர் அமுதத்தினில்-நலத்தை எண்ணுகின்ற அன்னையின் முலையில் நிறைந்துள்ள பாலில், இனிது ஆகி-அன்பனாகி வளர்ந்து, தரு தாரமும்- தனக்கென்று தந்த மனைவி, ஆகிய சுற்றமும்-உண்டாகியுள்ள உறவினர்களும், நலவாழ்வும்-நல்ல வாழ்வும், நிலாத பொருள்-நிலைத்து நிற்காத பொருளும், பதி-ஊரும், சதம் ஆம் இதுதான் என உற்று-இவையாவும் நிலையாம் என்று கருதி, உனை நினையாத சதுர் ஆய்-தேவரிரை நினையாத சாமர்த்தியம் உடையவனாய், உன தாள் இணையை-உமது இருதிருவடிகளை, தொழ அறியாத நிர்மூடனை-தொழுவதற்கு அறியாத முழுமூடனை, நின்புகழ் தனை ஓதி-உமது புகழினை ஓதி, மெய்ஞானம் உற செய்வது ஒருநாளே-உண்மை ஞானத்தை அடையச் செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ?

பொழிப்புரை

போர்க்களத்தில்எதிர்த்து வந்த அசுரர் கூட்டங்களின் தலை மூளை கொழுப்பு இறைச்சி இவைகளை, உடற் கொழுப்பும் ஏழு தாதுக்களும் படைத்த பூதக் கூட்டங்களுடன் வந்த பேய்கள், திகுதிகு என்று வேகமாக உணவாக உண்டு, நரிகளுடன் உதிரத்தை நிரம்பவும் குடித்து, சில கோட்டான்களுடன் கூத்தாடு மாறு கொன்ற தீரமூர்த்தியே! அரிய சிறந்த வேதியர்கள் துதி செய்கின்ற அழகிய தேவயானையைம், விளங்குகின்ற வண்டுகள் சேர்ந்த கூந்தலையுடைய வள்ளியம்மையையும் தழுவுகின்றவரே! அழகிய பொன்மய மான மேடைகளும், உயரத்திலுள்ள மேகங்கள் தழுவுகின்ற சோலைகளும் உடைய அற்புதமான பழமுதிர் சோலை யென்ற மலையில் விற்றிருக்கும், அன்பர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே! தாயின் வயிற்றில் கருவாகி உருவம் பெற்று, கால் கை இனிய வாய் கண் மூக்கு உடல் காது என்ற உறுப்புக்களுடன் மருத்துவச்சியின் கையில் விழும்படி வந்து, தாய் மிகவும் சீராட்டிப் படுக்கையில் தூங்கு என்று தூங்கச் செய்த, நலத்தைக் கருகின்ற அன்னையின் முலையில் நிறைந்துள்ள பாலில் பிரியம் உடையவனாகி வளர்ந்து, தனக்கென்று தந்த மனைவி, சுற்றம், நல்லவாழ்வு, நிலையில்லாத செல்வம், ஊர் முதலியவைகளை நிலையானவையென்று எண்ணி, உமது இரு திருவடிகளை