பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 391

 

நிற்புகழ் தனையோதி மெய்ஞ்ஞானமுறச் செய்வதொருநாளே:-

இறைவன் புகழ் இருள்சேர் இரு வினையைக் கெடுத்து ஞான வொளியைக் கொடுக்கும்.

இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு       - திருவள்ளுவர்.

“ஆதலால் முருகா! உனது திருப்புகழை யோதி அடியேன் மெய்ஞ்ஞான நிலையைப் பொருந்தும் நாள் என்று கிடைக்குமோ?” என்று அருணையடிகள் இறைவனிடம் முறையிடுகிறார்.

திகுதாவுணவாய்:-

திகுதிகு எனல்-விரைவுக்குறிப்பு.

அலையாமலை:-

அலை-மிகுதி. அதிசயங்கள் மிகுந்த மலை சோலைமலை.

கருத்துரை

சோலைமலைக் குமரா! உன்திருப்புகழைப் பாடிஅடியேன் செமஞ்ஞானம் பெற அருள்புரிவீர்.

11

சீர்சி றக்கு மேனி பசேல் பசே லென
நூபு ரத்தி னோசை கலீர் கலீ ரென
சேர விட்ட தாள்கள் சிவேல் சிவே லென                வருமானார்
சேக ரத்தின் வாலை சிலோர் சிலோர் களு
நூறு லக்ஷ கோடி மயால் மயால் கொடு
தேடி யொக்க வாடி யையோ வையோ வென               மடமாதர்
மார்ப டைத்த கோடு பளீர் பளீர் ரென
ஏம லித்தெ னாவி பகீர் பகீ ரென
மாம சக்கி லாசை யுளோ முளோ மென                நினைவோடி
வாடை பற்று வேளை அடா அடா என
நீம யக்க மேது சொலாய் சொலா யென
வாரம் வைத்த பாத மிதோ இதோ என                  அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானி றக்க ணேசர் குவா குவாகனர்                   இளையோனே
பாடன் முக்ய மாது தமிழ் தமீ ழிறை