பக்கம் எண் :


392 திருப்புகழ் விரிவுரை

 

மாது நிக்கு காதி லுணார் வுணார் விடு
பாச மற்ற வேத குரூ குரூபர                                    குமரேசா
போர்மி குத்த சூரன் விடோம் விடோ மென
நேரெ திர்க்க வேலை படீர் படீரென
போய றுத்த போது குபீர் ரென                              வெகுசோரி
பூமி யுக்க வீசு குகா குகா திகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தொள்
பூணி யிச்சை யாறு புயா புயா றுள                      பெருமாளே.

பதவுரை

பாரதத்தை-பாரதமென்ற சிறந்த இதிகாசத்தை, மேரு வெளீ-மேருகிரியின் பரந்த இடத்திலே, வெளீ திகழ்-வெண்மையாக விளங்குகின்ற, கோடீ ஒடித்த காளில் வரை-கொம்பை கஜமுகாசுரவதத்தின் போது ஒடித்த நாளிலேயே இது மீண்டும் அசுரசம்மாரத்திற்கும் எழுதுவதற்கும் ஆகுமென்று முடிவு செய்துகொண்டபடி, வரைபவர்-எழுதிய வரும், பானு நிறக் கண ஈசர்- சூரியனைப் போன்ற சிவந்த நிறமுடையவரும், கணங்கட்டுத் தலைவரும், குவ ஆகுவாகனர்-திரண்டிருக்கின்ற பெருச்சாளியை வாகனமாக வுடையவரும் ஆகிய விநாயகமூர்த்தியின், இளையோனே-இளைய சகோதரரே! பாடல் முக்ய மாது-சிறந்த பாடல்களோடு கூடிய கலைமடந்தைக்கு, தமிழ் இறை-இனிய மொழியாகிய தமிழ் மொழிக்குத் தலைவராகிய, மாமுனிக்கு-அகத்திய முனிவருக்கு, காதில் உணார்-செவியில் ஞான உணர்ச்சியை, உணார் விடு- உணர்த்திவிட்ட, பாசம் அற்ற வேத குரு-இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய ஞான குருமூர்த்தியே! குருபர-குருமூர்த்திகளுக்கெல்லாம் முதன்மையானவரே! குமர ஈசா-குமாரக்கடவுளே! போர் மிகுந்த சூரன்- போர்த்திறத்திலே மிகுந்த சூரபன்மன், விடோம் என நேர் எதிர்க்க-தேவர்கள் சிறையை விடமாட்டோம் என்று வீரவசனங்களைக் கூறி எதிராக வந்து எதிர்த்துப் போர்புரிதலும், வேலை படீர் படீர் என-கடல் படீர் என்று கதறவும், போய் ஆறுத்த சமயத்தில், குபீர் குபீர் என வெகுசோரி பூமி உக்க வீசு குகா- குபீர் குபீர் என்று மிகுந்த உதிரம் பூமியிற் சிந்தும்படி வேலை விடுத்தருளிய குகக்கடவுளே! குகா திகழ்சோலை வெற்பின் மேவு தெய்வா-குகைகள் திகழ்கின்ற பழமுதிர்சோலை என்னும் மலையில் விரும்பி வாழ்கின்ற தெய்வமே! தெய்வானைதொன் பூண் இச்சை ஆறுபுயா- தெய்வயானையம்மையாருடைய தோள்களை விருப்பத்துடன் அணிகின்ற ஆறு புயங்களையுடைய பெருமையிற் சிறந்தவரே! சீர் சிறக்கு மேனி பசேல்