பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 393

 

பசேல் என-அழகிலே சிறந்த மேனி பசுமையாக ஒளி செய்யவும், நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என-பாதத்திலுள்ள நூபுரமென்னும் ஆபரத்தின் ஒலி கலீர் கலீர் என்று சத்திக்கவும், சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என - நெருங்க விடுகின்ற கால்கள் சிவந்து தோன்றவும், வருமானார்-ஒய்யாரமாக வருகின்ற விலைமகளிர், சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களும்-கூட்டமாக இளம்பெண்களிற் சிலரும், நூறு லக்ஷ கோடி மயால் கொடு-எண்ணமுடியாத அளவில் மயக்கத்தையடைந்து, தேடி ஒக்க வாடி ஐயோ என.விருப்பத்தினால் தேடித் திரிந்து வாடி ஐயோ ஐயோ என்று வருந்தும், மடமாதர்-மடமைக்குணம் பொருந்திய மாதர்களின், மார்ப்டைத் கோடு பளீர் பளீர் என ஆவி பகீர் பகீர் என-மிகுந்த மகிழ்ச்சியடைந்து என் உயிர் பகீர் பகீர் என்று பதறவும், மா மசக்கில் ஆசை உளோம் என-பெரிய மயக்கினால் ஆசைகொண்டிருக்கின்றோம் என்று கூற, நினைவு ஓடி-அவர்களிடம் எனது எண்ணம் விரைந்து செல்ல, வாடை பற்றும் வேளை-அம்மகளிரினது மயல் காற்று என்னைப் பற்றுகின்ற காலத்து, அடா அடாஎன-அடாது அடாது என்னும், நீ மயக்கம் ஏது சொல்வாய் சொல்வாய் என-“உனக்கு ஏன் மயக்கம்? சொல்வாய் சொல்வாய்” என்றும், வாரம்வைத்த பாதம் இதோ இதோ என-நீ அன்புடைத்த திருவடி இதோ இருக்கின்றது‘ என்றும், அருள்வாயே- திருவருள்புரிவீர்.

பொழிப்புரை

பாரமென்ற பெருங்காவியத்தை வியாசமுனிவர் சொல்ல மேருகிரியில், வெண்மையாக திகழும் கொம்பை கஜமுக சம்மர காலத்தில் ஒடித்த அக்காலத்திலேயே முடிவு செய்தவாறு எழுதியவரும், சூரியனைப்போல சிவந்த நிறமுடையவரும் கணங்கட்குத் தலைவரும், திரண்ட பெருச்சாளியை வாகனமாக யுடையவருமாகிய விநாயகப் பெருமானுடைய இளைய சகோதரரே! சிறந்த பாடல்களோடு கூடிய கலைமடந்தைக்கு இனிய மொழியாகிய தமிழ் மொழிக்குத் தலைவராம் அகத்திய மாமுனிவருக்கு அவருடைய செவியில் ஞான உணர்ச்சியை உணரவிட்டவரும், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவருமாகிய மெய்ஞ்ஞான குருமூர்த்தியே! போர்த்திறத்தில் மிகுந்த சூரபன்மன் தேவர்கள் சிறையை ஒருபோதும் விடமாட்டோம் என்று கூறி எதிராக வந்து போர் புரிதலும், கடல் படீர் படீர் என்று கதறவும், வேற்படை சென்று அவுணர்களது உடலை அறுத்தபோது மிகுந்த உதிரம் குபீர் குபீர் என்று கொப்பளித்து பூமியில் சிந்த வேலை விடுத்தருளிய குகப் பெருமாளே! குகைகளுடன் கூடிய