பழமுதிர் சோலை யென்னும்திருத்தலத்தில் விரும்பி வாழுகின்ற தெய்வமே! தெய்வயானை யம்மையாருடைய தோள்களை அன்புடன் பூணுகின்ற ஆறு புயங்களையுடையவரே! மற்றைய ஆறு புயங்களையுடைய பெருமிதத்தின் மிகுந்தவரே! சிறந்த அழகியமேனி பசுமையாக ஒளி செய்யவும், காலிலுள்ள நூபுரங்கள் கலீர் என்று ஒலி செய்யவும், நெருங்கி விடுகின்ற கால்கள் சிவந்து அழகு செய்யவும், ஒய்யாரமாக வருகின்ற விலைமகளிரில் இளம் பெண்களிற் சிலர் மிகுந்த மயக்கத்தையடைந்து என்னைத் தேடி வந்து, “ஐயோ! மிகுந்த விருப்பத்தால் மயங்கியிருக்கின்றோம்” என்று கூறவும், அது கண்டு என் உயிர் பகீர் என்று துடிக்கவும், அவர்களிடத்தில் எனது எண்ணம் விரைந்து செல்லவும், அம்மகளிரது மயல்காற்று என்னைப் பற்றுகின்ற காலத்து, “அன்பனே! இது உனக்கு அடாது! உனக்கென்னமயக்கம்? சொல்வாய், நீ அன்பு வைத்த பாதம் இதோ இருக்கின்றது” என்று திருவருள்புரிவீர். விரிவுரை வாடை பற்றும் வேளை அடா அடா என:- பெண்கள் மயலை வாடைக்காற்றாக உருவகம் புரிந்தனர். வாடைக்காற்று குளிர் நடுக்கம் முதலிய துன்பம் புரிவதுபோல் பெண்மயலும் பெருத்த துன்பத்தைத் தரும். “காமமில்லையெனிற் கடுங்கேடெனும் நாமமில்லை நரகமுமில்லையே” - இராமாயணம். அடாது அடாது என்பது அடா அடா என கடைக் குறையாக நின்றது. திருநாவலூரில் ஆதிசைவர் மரபிலே சடையனாருக்கு இசைஞானியார்பால் அவதரித்த நம்பியாரூரை. தடுத்தாட் கொண்டும் பொருட்டு, திருக்கயிலை மலையினின்று மண்ணுலகிற்கு, கிழவடிவு தாங்கி வந்து ஓலை காட்டி வலி திலாட்கொண்ட வள்ளலாகிய சிவபெருமானுடைய திருமைந்தராதலின் வாடை பற்றும் வேளை ஆட்கொள்ளுமாறு சுவாமிகள் வேண்டுகின்றனர். ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்தே சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான் மேலுற வெழுந்துமிகு கீழற வகழ்ந்து மாலுமிகு வர்க்குமரி யாரொருவர் வந்தார். - பெரியபுராணம்.. நீ மயக்கம் சொலாய் சொலாய் என:- “சுவாமீ! தேவரீர்மகமாயை களைந்திட வல்ல பிரானாதலின் |