பக்கம் எண் :


396 திருப்புகழ் விரிவுரை

 

மாதே வா சம்போகந் தா என்று எழுதினால் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆகின்றது என்று பாருங்கள். ஆதலினால் விநாயகராகிய ஐந்துகர பண்டிதரே எழுதவல்லாரென்று வியாசர் நினைத்தனர். விநாயகமூர்த்தியை வேண்டிய தவ மிழைத்தனர். ஆனைமுகத்தண்ல் ஆகு வாகனமீது தோன்றி யருளினார். விநாயகர் விரைமலரடி மேல் வியாசர் வீழ்ந்து பன்முறை பணிந்து, “எந்தையே! அடியேன் பாரதம் பாட மேற்கொண்டிருக்கிறேன். அதனைத் தேவரீர் மேருகிரியில் எழுதி யுதவிசெய்தல் வேண்டும்” என்று வேண்டிநின்றனர். விநாயகர் புன்னகை புரிந்து, “அன்பனே! நன்று நன்று. நின் எண்ணம் நன்று. நான் உன்னிடம் பாரதம் எழுத ஒப்புக் கொண்டேனாயின் எத்தனையோ அன்பர்களின் காரியங்களில் இடர்கெடுத்து உதவுதல் வேண்டியதற்குத் தடைபடுமல்லவா? அதுவும் நீ நூதனமாகப் பாடிக்கொண்டிருந்தால் பாரதம் பாடி முடிய எத்துணை ஆண்டுகள் செல்லுமோ? ஆதலின் இதற்கு நாம் உடன்பட மாட்டோம்” என்றனர்.

வியாசர், “ஆண்டவரே! அருட்கடலே! தேவரீரைத் தவிர இதனை எழுத வல்லார் வேறு இல்லை. வேண்டிய வரங்கொடுக்கும் கருணைவள்ளலாகிய நீர் இதனை மன்பதைகட்கெல்லாம் நலன் விளையும் பொருட்டு எழுதல் வேண்டும்” என்று வேண்டி வணங்கினார். விநாயகர், “அன்பனே! அங்ஙனமே நின் கருத்தின்படி நாம் எழுதுவோம். ஆனால் உனக்கும் எமக்கும் ஓர் உடன்படிக்கையிருத்தல் வேண்டும். அதாவது நாம் மிக்க வேகமாக எழுதுவோம். எமது எழுத்தாணி ஒழியாமல் நீ சொல்ல வேண்டும். சிறிது தடைபட்டாலும் நாம் எழுதுவதை நிறுத்திவிடுவோம்” என்றனர். வியாசர், “எம்பெருமானே! அங்ஙனமே மிக்க விரைவுடன் கூறுவேன்; ஆனால் அடியேன் கூறும் சுலோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டு எழுதுதல் வேண்டும்” என்றார். விநாயகரும் அதற்கு உடன்பட்டனர்., வியாசர் விநாயகரைத் தியானித்துப்பாடத் தொடங்கினார். திருவருள் துணைசெய்ய வேகமாகப் பாடுவாராயினார். இடையில் மிக்கக் கடினமான பதங்களுடைய ஒரு சுலோகத்தைச் சொன்னார். விநாயகர் சற்று அதன் பொருளைச் சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டனர். அவைகளை மிக்க விரைவுடன் கூறிய பின் மீண்டும் ஒரு கடின பதங்களமைந்த சுலோகத்தைக் கூறினார். ஐயங்கரனார் அதன்