என்று கூறி தேவர்சிறையை விடாது மறுத்துவிட்டான். அதனால் முருகவேள் வேலாயுதத்தால் அவர்களை அழித்து அமரர் சிறைமீட்டனர். கருத்துரை விநாயகரது தம்பியே! குருபரரே! சூரபன்மனாதி யவுண குல காலரே! சோலைமலைக் கதிரேசரே! பெண்மயலுற்று வாடைபற்றும் வேளை தேவரீர் தடுத்தாண்டு காத்தருள்வீர். துடிகொ ணோய்க ளோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இரும லீளை வாத பித்த மணுகாமல் துறைக ளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை யற்று சுகமு ளாறு பூதி பெற்று மகிழாமே உடல்செய் கோர பாழ்வ யிற்றை நிதமு மூணி னாலு யர்த்தி யுயிரி னீடு யோக சித்தி பெறலாமே உருவி லாத பாழில் வெட்ட வெளியி லாடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்ம முருவேனோ கடிது லாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயு மிக்க மலைகள் போட ஆழி கட்டி யிகலூர்போய்க் களமு றானை தேர்நு றுக்கி தலைக ளாறு நாலு பெற்ற அவனை வாளி யால டத்தன் மருகோனே முடுகு வீர சூர பத்மர் தலையின் மூளை நீறு பட்டு முடிவ தாக ஆடு நிர்த்த மயில்வீரா முனிவர் தேவர் ஞான மாம லைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. |