பக்கம் எண் :


400 திருப்புகழ் விரிவுரை

 

பதவுரை

கடிது உலாவு வாயு பெற்ற மகனும்-வேகமாகவுலாவுகின்ற வாயு தேவன் பெற்ற மைந்தனாம் அநுமனும், வாலி சேயும்-வாலியின் மகனாம் அங்கதனும், மிக்க மலைகள் போட-மிகுதியாக மலைகளைக் கொணர்ந்து போட, ஆழி கட்டி-கடலில் அணைபுதுக்கி, இகல் ஊர்போய் - பகைவருடைய ஊருக்குச் சென்று, களம் உறு-போர்க்களத்தில் வந்த, ஆனை தேர் நுறுக்கி- யானைகளையும் தோக்ளையுந் தூளாக்கி, தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை-பத்துத்தலைகள் படைத்த இராவணனை, வாளியால் அடு அத்தன் மருகோனே-அம்பினால் கொன்ற திருமாலின் மருமகரே! முடுகு வீர-போரில் முடுகிவந்த விரராகிய, சூர பத்மர்-சூரபதுமர் என்பவரின், தலையின் மூளை நீறுபட்டு முடீவு அது ஆக-தலையில் உள்ள மூளையானது தூளாகி முடிவுபெற, ஆடும் நிர்த்தம்-நடனம் ஆடிய, மயில் வீரா-மயில் வீரரே! முனிவர்தேவர்- முனிவர்களும் தேவர்களும், ஞானம் உற்ற-ஞானத்தை யடைந்த, புனித சோலை மாமலைக்கு உள் முருக-பரிசுத்தமான சோலை மாமலைக்குள் வீற்றிருக்கின்ற முருகக்கடவுளே! வேல-வேலவரே! த்யாகர் பெற்ற-தியாக மூர்த்தியாம் சிவபெருமான் பெற்ற, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! துடி கொள் நோய்களோடு வற்றி-துடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றி, தருணமேனி கோழை துற்ற-இளமையுடன் கூடிய மேனியில் கோழை, நெருக்க, இருமல ஈளை வாத பித்தம் அணுகாமல்-இருமல் காசம் வாதம் பித்தம் எனப்படும் நோய்கள் அடியேனை அணுகாதபடி, துறைகளோடு வாழ்வுவிட்டு- அறத்துறைகளுடன் கூடிய இவ்வாழ்வை விடுத்து, உலக நூல்கள் வாதை அற்று-உலக சம்பந்தமான நூல்களைக் கற்கவேண்டிய வேதனை நீங்கி, சுகம் உள அநுபூதி பெற்ற-சுகத்தையுடைய அநுபூதியைப் பெற்று, மகிழாமே- அடியேன் மகிழ்ச்சியடையாமல், உடல் செய் கோர பாழ் வயிற்றை-உடலை வளர்க்கும் கோரமான பாழான வயிற்றை, நிதமும் ஊணினால் உயர்த்தி- தினந்தினமும் உணவினால் வளரச் செய்து, உயிரின் நீடு யோக சித்தி பெறல் ஆமே-உயிர் நிண்ட காலம் இருக்கும்படியான யோகசித்திகளைப் பெறுதல் நன்றோ? உரு இலாத பாழில்-உருவம் கடந்த பாழ் வெளியில், வெட்ட வெளியில் ஆடும் நாத நிர்த்த-வெட்ட வெளியிலே நாத கிதத்துடன் ஆடுகின்ற கூத்தக் கடவுளே! உனது ஞான பாத பத்மம் உறுவேனோ-தேவரீருடைய ஞானமேயான பாத தாமரையை அடைவேனோ?

பொழிப்புரை

வேகமாக வுலாவுகின்ற வாயுதேவன் பெற்ற அநுமனும், வாலிமகனாகிய அங்கதனும் மிகுதியான மலைகளைக் கொணர்ந்து போட, சமுத்திரத்தில் அணைகட்டு, பகைவருடைய ஊருக்குள்