பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 403

 

எல்லாங் கடந்த வெட்ட வெளியில் அரன் நாத ஒலியுடன் முருகன் நடனம் புரிகின்றார்.

ஞான பாதபத்மம்:-

இறைவனுடைய திருவடி ஞானமேயாகும்.

“வள்ளல் தொழு ஞானக் கழலோனே”  - (துள்ளுமத) திருப்புகழ்.

“ஞானமேயான திருவடியுடையாய்”
                                       - (கண்ணன்தூது) வில்லிபாரதம்.

கடிதுலாவு வாயு மகன்:-

அஞ்சனையென்ற பெண் வாநரத்திடம் வாயுதேவனுக்குப் பிறந்தவர் அநுமார். சூரியனைக் கனியென்று பற்றச் சென்றவர் சூரியனிடம் ஒன்பது வியாகரணங்களையும் கற்றவர். நைஷ்டிக பிரமசாரி. எட்டுச் சித்திகளிலும் வல்லவர்.

வாலிசேயும்:-

வாலிமகன்-அங்கதன். உபேந்திரனுடைய அம்சமாகப் பிறந்தவன். இராவணனிடம் தூது சென்றவன். பேராற்றல் படைத்தவன். இராமர் பொன்வாளைக் கொடுக்க, அதனை ஏந்தி நிற்பவன்.

“பொன்னுடை வாளைநீட்டி நீஇதைப் பொறுத்தி யென்றான்”
“அரியணையநுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த”
                                                      - இராமாயணம்.

மிக்க மலகள் போட ஆழிகட்டி:-

அநுமன்அங்கதன் முதுலிய சிறந்த வானர வீரர்கள் நிரம்ப மலைகளைக் கொணர்ந்து இட இராமர் நளன் என்பவனைக் கொண்டு கடலில் அணைகட்டி, இலங்கைக்குச் சென்றார்.

முடுகுவீர சூரபத்மர்:-

சூரன், பதுமன்இருவரும் சேர்ந்து ஒருவராகப் பிறந்தார்கள்.

இவ்விருவரும் முற்பிறப்பில் முருகவேளுக்கு மயிலும் சேவலும் ஆகித் தொண்டுபுரியத் தவஞ் செய்தவர்கள். கருடனுக்கும் அன்னத்துக்கும் ஊறு செய்தபடியால், அசுரர்களாகுமாறு முருகவேள் சபித்தருளினார். அதனால் அவர்களைத் திரும்பவும் மயிலும் சேவலுமாக்கி அருள் புரிந்தார்.

நீவிர்தாம் இருவிர் ஒருவடிவாகி நிருதரிற் சூரபத்மாவென்
றோவிலா விறல்கூர் பெயர்தரித் திமையோர்க் குறுபகையா
                                                        யுடற்றிடுநாள்
தாவில்சீர் எமதாணையிலுமக் கொழுகு தாழ்பகஞ் சிறகர்மாயூரம்
சேவலாம் வடிவுண்டாமென முறுவல் சிறிதுகூர்ந்
                                                       துரைத்தனுப்பினனால்.
                                   - உபதேசகாண்டம் (ஞானவரோதயர்)