பக்கம் எண் :


404 திருப்புகழ் விரிவுரை

 

ஆடுநீர்த்த:-

சூரனைச் சங்கரித்தவுடன் முருகவேள் துடி என்ற கூத்து ஆடியருளினார்.

“சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்”       - சிலப்பதிகாரம்.

முனிவர் தேவர் ஞானமுற்ற புனித சோலை மாமலை:-

முனிவர்களும், தேவர்களும் இந்தப் பழமுதிர்சோலையில் வந்து ஞானத்தைப் பெறுகின்றார்கள். இதனால் இந்தத் தலத்தின் பெருமை புலனாகின்றது.

சரியை-அரும்பு; கிரியை-மலர்; யோகம்-காய்; ஞானம்-பழம்.

விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.       - தாயுமானார்

கருத்துரை

பழமுதிர் சோலைவேலவனே! ஞானத் திருவடியைப் பெற அருள்செய்வீர்.

13

பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
பாரப் பூதர மொத்தத னத்திகள்             மிகவேதான்
பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
பார்வைக் கேமய லைத்தரு துட்டிக          ளொழியாக
மாசுற் றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயோளி பற்றவி ளக்கிகள்
மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள்        அதிமோக
வாய்வித் தாரமு ரைக்கு பத்திகள்
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின       மலைவேனோ
தேசிக் கானக முற்றிதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள்       மணவாளா
தேடிப் பாடிய சொற்புல வர்க்கித
மாகத் தூது செலத்தரில் கற்பக
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி        வருவோனே