பக்கம் எண் :


406 திருப்புகழ் விரிவுரை

 

நீறு இட்டு-சாம்பலைவிட்டு, ஒளிபற்ற விளக்கிகள்-பளபளப் புண்டாகுமாறு விளக்குபவர்கள்; மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அந்த அணிகலன்களைத் தங்கள் மார்பிலும், காதுகளிலும், அணிந்து தளுக்கு செய்பவர்கள்; அதிமோக-அதிகமோகத்தையுண்டாக்குமாறு-வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள்-வாய்விரிவாகப் பேசும் பொய்யர்கள்; ஆரையும் நேசித்து-யாராயிருப்பினும் சிநேகஞ் செய்து, எத்தி வடிப்பவர்-ஏமாற்றி வடிகட்டுபவர்கள்; ஆகிய இத்தகைய பொதுமாதர்களின், மாயைக்கே மனம் வைத்து-மாலையில் என் மனத்தை வைத்து, அதன் உள்தினம் அலைவேனோ- அந்த மாயையுள் அடிையேன் நாள்தோறும் அலைவேனோ?

பொழிப்புரை

அழகிய காட்டில் சென்று, அத்தினைப்புனத்தில் காவல் புரிந்து கவண் கல் சுழற்றுபவளும், குளிர்ந்த திருவடியையுடைய யவளுமாகிய குறமகளாம் வள்ளியம்மையின் மணவாளரே! தலங்கள் தோறும் தேடிச்சென்று, செந்தமிழ்ப் பாடல்கள் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இன்பம் உண்டாகுமாறு தூது சென்ற சிவபெருமாளிடத்தில் தோன்றிய கற்பகமே! தேவர்கட்கு முதல்வரே! சீர்காழியில் திருஞான சம்பந்தராக வந்தருளியவரே! விரும்பி வாழ்த்துவோர் மனக்கோயிலில் புகுந்துறையும் உத்தமரே! மதுரையம்பதியில் வைகையாற்றில் கரைகட்டும் பொருட்டு ஆளாகிச் சென்று, உதிர்ந்த பிட்டுக்காக, அடிபட்ட சொக்கநாதர் உறையும் மதுரைக்கு அருகில், சந்தனமரம் அகில்மரம் முதலிய மரக்கூட்டங்களுள் மேகத்துடன் ஒன்றுபட்டு நெருங்கியுள்ள, பழமையான பழமுதிர்சோலை மலையில் விளங்கும் பெருமிதமுடையவரே! தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்துள்ள பாசத்தையுணர்ந்து அதற்கு ஏற்ப விலைபேசி முடிவு செய்யும் வேசிகள்; தம்மை நேசித்தவர்களை மயக்குபவர்கள்; மிகுந்த பாவ வினையின் காரணத்தால் உடம்பெடுத்த விபசாரிகள்; சீவிக்கோதி முடித்த கூந்தலை யுடையவர்கள்; பார்வையாலேயே மோக மகத்தத்தைத் தருகின்ற துண்டைகள்; ஒழியாது அழுக்கு அடைந்துள்ள மிகுந்த பித்தளை நகைகளைச் சாம்பல் இட்டுப் பளபள என்று மினுக்கி வைத்துள்ளவர்கள்; அந்நகைகளை மார்பிலும் காதிலும் அணிந்து தளுக்குபவர்கள்; மிகுந்த மோகத்தை உண்டாக்க விரிவாகப் பேசும் பொய்யர்கள்; யாராயிருப்பினும் நட்புகொண்டு ஏமாற்றி வடிகட்டுபவர்கள் ஆகிய பொதுமாதர்களின் மாயைச் செய்கையுள் மனம் வைத்து, அம்மாயைக்குள் தினந்தோறும் அடியேன் அலைவேனோ?