பக்கம் எண் :


408 திருப்புகழ் விரிவுரை

 

ஆசித்தார் மனதிற் புகுமுத்தம:-

முருகனை ஆசிரயித்த அன்பர்களின் மனதில் புகுந்து; அங்கு அப்பரமகருணாநிதி விளையாடிக் கொண்டிருப்பான்.

“என்உளமேபுகுந்த அதனால்”                   - (வேயுறு) சம்பந்தர்.

“சிந்தையுள்புகுந்த செல்வமே”                   - திருவாசகம்.

“மருவுமடியார்கள் மனதில் விளையாடு
   மரகத மயூரப் பெருமாள்காண்”             - (திருமக) திருப்புகழ்.

“மாசிலடியார்கள் வாழ்கின்ற வூர்சென்று
தேடிவிளையாடியே யங்ஙனே நின்று” - (மூளும்வினை) திருப்புகழ்.

வைகையிற் கரைகட்டிட ஆளொப்பாயுதிர் பிட்டமுதுக்கடி படுவோன்:-

அரிமர்த்தன பாண்டியன் மணிவாசகரைத் துன்புறுத்தியதனால் மதுரையை யழிப்பது போல் வைகை நதியில் வெள்ளம் பெருகியது. அதன் கரையை உயர்த்துமாறு மக்களுக்கு மன்னன் ஆணை பிறப்பித்தான்.

வந்தியமலையின் வருத்தத்தை மாற்றமூவருக்கும் எட்டாத முழு முதல்வன் கூலியாளாக வந்து உதிர்ந்தபிட்டுக்காக மண் சுமந்து, பாண்டியனால் அடிபட்டு, பெண் சுமந்தமேனியில் புண் சுமந்தார்.

“மாடையாடைதர பற்றிமு னகைத்து வைகை
   யாறின்மீதுகட மிட்டுமணே டுத்துமகிழ்
   மாதுவாணிதரு பிட்டுநுகர் பித்தனருள்க ந்தவேளே”
                                                  -(சீதவாசனை) திருப்புகழ்.

கருத்துரை

பழமுதிர்சோலைமேவிய பரனே! மாதர் மயல் தீர ஆருள் புரிவாய்.

14

அழகு தவழ்குழல் விரித்துக்காட்டி
        விழிகள் கடையிணை புரட்டிக்காட்டி
        அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி              யனுராக
       அவச இதமொழி படித்துக் காட்டி
        அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி
        அமர்செய் நகறுதி யழுத்தைக் காட்டி              யணியாரம்
ஒழுகு மிருதன மசைத்துக்காட்டி
ஒழுகு மிருதன தசைத்துக் காட்டி
        எழுத வரியிடை வளைத்துக் காட்டி
        உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி                யுறவாடி