பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 409

 

       உருகு கடிதட மொளித்துக்காட்டி
       உபய பரிபுர பதத்தைக்காட்டி
       உயிரைவிலை கொளுமவர்க்குத் தேட்ட      மொழிவேனோ
       முழுகு மருமறை முகத்துப் பாட்டி
       கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட
       முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு           முனிநாடா
       முடுகு முதலையை வரித்துக் கோட்டி
       அடியர் தொழமக வழைத்துக் கூட்டி
       முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட        முதுநீதர்
பழய கடதட முகத்துக் கோட்டு
       வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு
       பரமர் பகிரதி சடைக்குட் சூட்டி                  பரமேசர்
       பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
       குமர குலமலை யுயர்த்திக் காட்டு
       பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு           பெருமாளே.

பதவுரை

அருமறை முகத்து முழுகும் பாட்டி கொழுநர்-அரிய வேதத்தின் முகத்தில் முழுகுகின்ற கலைமகளின் கணவராகிய பிரமதேவரது, குடுமியை அறுத்துப்போட்ட முதல்வ-குடுமியை அறுத்தெரிந்த தலைவரே! குகைபடு திரு பொன் கோட்டு-குகைகள் அமைந்த அழகிய பொன் மேருகிரியை, முனி- கோபித்தவரே! நாடா-இறைவனை நாடி, முடுகு முதலையை வரித்து-விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, காட்டி அடியர் தொழு-கூட்டமான அடியார்கள் தொழுது நிற்க, மகவு அழைத்து கூட்டி-முதலையுண்ட மதலையை அழைத்துப் பெற்றோரிடஞ் சேர்த்து, முறை செய் தமிழினை-சுந்தரர் முறையிட்ட தமிழ்மறையை, விரித்து கேட்ட-விரிவாகக் கேட்டருளிய, முதுநீதர்- பழைய நீதிமானும், பழைய கட தட முகத்து கோட்டு-பழையதும் மதம்பாயும் விசாலமான முகத்தையும் கொம்பையும் உடையதுமான, வழுவை உரி அணி- யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவரும், மறை சொல் கூட்டு பரமர்-வேத மொழியைச் சொன்னவரும், பகிரதி சடைக்கு உள் பரம ஈசர்- சடைக்குள் கங்கா நதியை முடித்த பரமேச்சரரும், ஆகிய சிவபெருமான், பணிய-தேவரீரைப்பணிய, அருள் சிவமயத்தை காட்டு குமர-அவருக்கு சிவமயமான பிரணவப் பொருளை அருள் செய்து காட்டிய குமாரக் கடவுளே! குலமலை உயர்த்தி