பக்கம் எண் :


410 திருப்புகழ் விரிவுரை

 

காட்டு-சோலைமலையை புகழால் உருமாறு, காட்டியவரே! பரிவோடு அணிமயில் நடத்தி காட்டு-அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டிய, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! அழகு தவழ் குழல் விரித்து காட்டி- அழகு தவழ்கின்ற கூந்தலை விரித்துக்காட்டியும், விழிகள் கடை இணை புரட்டி காட்டி-இனிய பேச்சுக்களைப் பேசிக்காட்டியும், அதரம் அழிதுவர் வெளுப்பை காட்டி-வாயிதழின் செம்மை யழிந்த பவளம் போன்ற வெளுப்பைக் காட்டியும், அமர் செய் நகநுதி அழுத்தை காட்டி போரிடும் நகத்தின் நுனி அழுத்தினதைக் காட்டியும், அணி ஆரம் ஒழுகும்-அழகிய முத்துமாலை தொங்குகின்ற, இருதனம் அசைத்து காட்டி-இரண்டு கொங்கைகளையும் அசைத்துக் காட்டியும், ஒழுக அரிய இடை வளைத்து காட்டி-எழுதற்கு அரிய இடையை வளைத்துக் காட்டியும், உலாவுகின்ற புடவையைத் தளர்த்திக் காட்டியும், உறவு செய்து உள்ளத்தை உருகச் செய்கின்ற அல்குலை ஒளிப்பதுபோல் காட்டியும் சிலம்பு அணிந்த இரு பாதங்களைக் காட்டியும், உயிரை விலையாகக் கொள்ளுகின்ற பொதுமாதரின் விருப்பத்தை ஒழிக்க மாட்டேனோ?

பொழிப்புரை

அருமையான வேதப்பொருளில் முழுகுகின்ற கலைமகளின் கணவராகிய பிரமதேவரின் குடுமியை அறுத்து எறிந்த தலைவரே! குகைகள் அமைந்த பொன் மேருகிரியைக் கோபித்தவரே! திருவருளை நாடி, விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, கூட்டமாக நின்ற அடியார் தொழுமாறு முதலையுண்ட மதலையை அழைத்துப் பெற்றோரிடம் சேர்த்த சுந்தரருடைய முறை செய்த தமிழ்ப் பாடலைக் கேட்டவரும், பழமையான நீதிபதியும், மதம் பொழியும் விசாலமான முகத்தையும் தந்தத்தையும் உடைய பழையயாவையை உரித்துப் போர்த்துக் கொண்டவரும், வேதமொழியரும், பெரியவரும், கங்கையைச் சடைக்குள் முடித்தவரும், பரமேசரும் ஆகிய சிவபெருமான் பணிந்து கேட்க, சிவமயமான ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்தருளிய குமாரக் கடவுளே! சோலைமலையில் எழுந்தருளி அம்மலையைப்