பெருமைப்படுத்தியவரே! அன்புடன் அழகிய மயிலை நடாத்தியருளிய பெருமிதமுடையவரே! அழகு தவழ்கின்ற கூந்தலை விரித்துக் காட்டியும், கண்ணின் கடைப்புறம் இரண்டையும் புரட்டிக் காட்டியும், அழகிய பொன்னாபரணங்களையும் குழையையும் விளக்குமுறக்காட்டியும், காம விருப்பத்தை விளைவிக்க வல்லதும், தன்வசம் அழிக்க வல்லதும் ஆகிய இனிய மொழியைப் போன்ற வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகத்தின் நுனியை அழுத்திக் காட்டியும், முத்துமாலை தொங்குகின்ற இரு கொங்கைகளையும் அசைத்துக் காட்டியும், எழுதுதற்கு அரிய இடையை வளைத்துக் காட்டியும், உலாவுகின்ற புடவையைத் தளர்த்திக் காட்டியும், உறவு செய்து உள்ளத்தை உருகச் செய்கின்ற அல்குலை ஒளிப்பதுபோல் காட்டியும் சிலம்பு அணிந்த இரு பாதங்களைக் காட்டியும், உயிரை விலையாகக் கொள்கின்ற பொதுமகளிரின் விருப்பத்தை ஒழிக்கமாட்டேனோ? விரிவுரை இத்திருப்புகழில் முதற்பகுதி விலைமாதர்களின் சாகசங்களை விரித்துக் கூறுகின்றது. முழுகுமருமறை முகத்துப் பாட்டி:- பாட்டி-பெரியவள். வேதத்தில் வல்லவன் சரசுவதி. குடுமியை யறுத்துப் போட்ட:- பிரமனின் தலையில் முருகவேள் குட்டியபோது குடுமியறுந்து விழுந்தது. “சிகைதூளிபட தாளமிடும்இளையோனே” - (வாலவுய) திருப்புகழ். திருப்பொற்கோட்டு முனி:- பொன் மேருகிரியை உக்கிரப் பெருவழுதி செண்டால் எறிந்த வரலாற்றை இது குறிக்கின்றது. இதன் விரிவை திருப்புகழ் விரிவுரை முதல் தொகுதி 69ம் பக்கத்தில் காணலாம். மகவழைத்துக் கூட்டி முறைசெய்:- அவநாசியில் முதலையுண்ட பாலனைச் சுந்தரர், “கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே” என்று தேவாரம் பாடி வருவித்துப் பெற்றோரிடம் சேர்த்தருளினார். குலமலை:- குலமலை-பழமுதிர் சோலை. |